உள்ளங்கையை பார்த்தால் நல்ல நாள் தான்!

நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு, கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.

நம் அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு, கைகள் மிகவும் பயன்படுகின்றன. கைகளின் இல்லையெனில் நம்மால் ஒரு வேலையும் செய்ய இயலாது. நம் புலன்களில் கைகளுக்கு சிறப்பான இடம் உண்டு.

காலையில் எழுந்தவுடன் இரண்டு கைகளையும் தேய்த்து உள்ளங் கைகளைப் பார்க்க வேண்டும். இதனால் அன்றைய பொழுது பிரச்னையில்லாமல் நடக்கும். கை வெளுப்பாக இருக்கும். இந்த வெளுத்த உள்ளங்கையில் விழிப்பது நல்ல சகுனமாகும்.

உள்ளங்கையில், மஹா சக்தி, மஹா லட்சுமி, மஹா சரஸ்வதி வாசம் செய்கின்றனர். இவர்களின் அருளைப் பெறுவதற்கு, கைகளை பார்க்க வேண்டும்.

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நாம் ’இன்று யார் முகத்தில் விழித்தேனோ; இன்றைய நாளே சரியில்லை’ என நாம் புலம்புவது வழக்கம். நம் கைகளில் விழித்தால் பிரச்னை இல்லையே.
கையை பார்க்கும்போது…

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரி: ஸ்யாத் ப்ரபாதே கரதர்சனம்”

என்ற ஸ்லோகத்தை சொல்லிவிட்டு விழிக்கலாம்.
இதனால் அன்றைய நாள் குதூகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். காரியத் தடைகள் இருக்காது.

Newstm.in

newstm.in

Next Story
Share it