சாய்பாபாவை கவர்ந்த ஆடுகள்... என்னாச்சு தெரியுமா?

சாய்பாபா ஒரு நாள், சீரடியில் உள்ள லெண்டி தோட்டத்தில் இருந்து துவாரகா மயியிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அச்சமயம் ஒருவன் ஆட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு வந்தான். அந்த ஆட்டு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் சாய்பாபாவை கவர்ந்தது.

சாய்பாபாவை கவர்ந்த ஆடுகள்... என்னாச்சு தெரியுமா?
X

சாய்பாபா ஒரு நாள், சீரடியில் உள்ள லெண்டி தோட்டத்தில் இருந்து துவாரகா மயியிக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அச்சமயம் ஒருவன் ஆட்டு மந்தையை ஓட்டிக் கொண்டு வந்தான். அந்த ஆட்டு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் சாய்பாபாவை கவர்ந்தது. அவற்றை அன்புடன் தடவிக் கொடுத்து விட்டு, இரண்டு ஆடைகளையும் 32 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார்.

சாய்பாபாவின் செய்கை கண்டு பக்தர்களுக்கு வியப்பை அளித்தது. காரணம் ஒவ்வொரு ஆடும் இரண்டு ரூபாய்க்கு மேல் இருக்காது. இதனை 16 ரூபாய் வீதம் கொடுத்து ஏமாந்துவிட்டாரே என்று எண்ணினார்கள். பின்னர், சாய்பாபா தமக்கு குடும்பமே இல்லாத நிலையில் தாம், இதை வைத்துக் கொள்வது தகாது என கூறி. அந்த இரண்டு ஆடுகளுக்கும் நான்கு சேர் பருப்பு வாங்கி கொடுத்து விட்டு மீண்டும் ஆட்டு மந்தையை ஒட்டி வந்தவனிடமே அந்த இரண்டு ஆடுகளையும் கொடுத்து அனுப்பி விட்டார்.

இந்த செய்கை விளங்காத பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க ஆஸ்தான பக்தர்களான சாமாவையும், தாத்யா கோதேயையும் தன் அருகே கூப்பிட்டார். "நான் ஏமாந்து போனதாக அல்லவா நினைக்கின்றீர்கள்? ஆகையால் நான் கூறுவதை கேட்டால் எல்லாம் புரியும் என்று கூற ஆரம்பித்தார் சாய்பாபா. "இந்த இரு ஆடுகளும் முற் பிறவியில் மனிதர்களாக பிறந்து எனது சகாக்களாக இருந்தன.

முதலில் ஒருவருக்கு ஒருவர் பிரயமாக இருந்து வந்த இரு சகோதரர்களும் பின்னர் விரோதிகளாக மாறினர். பெரியவன் சோம்பேறி, இளையவன் சாதுர்யத்தால் நிறைய பொருள் சேர்த்தான். பெரியவன் ஆசையாலும்,பொறாமையாலும் உந்தப் பட்டு இளையவனை கொன்று விட வேண்டும் என்று எண்ணினான். உடன் பிறந்த சகோதரர்கள் என்பதையும் மறந்து இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு இறுதியில் இருவரும் மாய்ந்தனர்.

இப்போது ஆடுகளாக பிறந்த அவர்களை நான் தெரிந்து கொண்டேன். அவர்களிடம் இரக்கம் கொண்டு அவர்களுக்கு நல்ல ஆகாரம் கொடுத்து ஆதரவு அளிக்கலாம் என்று எண்ணினேன். நான் செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அறிந்து அவற்றை திரும்பி அனுப்பிவிட்டேன்" என்றார் சாய்பாபா.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்newstm.in

Tags:
Next Story
Share it