Logo

சங்கடம் நீங்கி சந்தோஷம் தருவாள் சந்தோஷி மாதா

தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து இந்த பூஜையை நிறைவு செய்தால் வேண்டிய அனைத்தும் தடையின்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 | 

சங்கடம் நீங்கி சந்தோஷம் தருவாள்  சந்தோஷி மாதா

ஏழை, பணக்கார பாகுபாடின்றி அனைவருக்கும் தேவையானது ஒன்றே ஒன்றுதான். அதைத் தேடி தான் உலகில் இருக்கும் மக்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் வாங்க முடியாததில் இதுவும் ஒன்று. அதுதான் சந்தோஷம்.

சந்தோஷத்தை வற்றாமல் அருளுகிறாள் சந்தோஷிமாதா. பெண்கள் அதிகம் பூஜிக்கும் தெய்வங்களில் இவளுக்கு முக்கியப்பங்குண்டு. பரம் பொருளான பிள்ளையார் பூலோகத்துக்கு தம் மனைவி சித்தி, புத்தி, அவரது புத்திரர்களான லாபம், சுபத்துடன் வந்த நாள் ரக்ஷா தினமாக கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் உடன் பிறந்தவர்களிடம் வாழ்த்தும் ஆசியும் பெறும் இந்நாளில் நமக்கும் ஒரு சகோதரி இருந்திருக்கலாம் என்று லாபமும், சுபமும் பேசிக்கொண்டார்கள்.

பூலோகத்தில் இருப்பவர்களை சகோதரியாக ஏற்கமுடியாது என்பதால் மேலுலகம் சென்று நாரதரிடம் முறையிட்டார்கள். நாரதரும் பிள்ளை யாரிடம் பிள்ளைகளின் விருப்பத்தைக் கூறினார்.  புத்திரர்களின் வருத்தத்தை தீர்க்க பிள்ளையார், சித்தி, புத்தி இருவருடனும் இணைந்து ஒரு பெண்குழந்தையை உருவாக்கினார்.பெண் குழந்தையால் பிள்ளைகள் மகிழ்ச்சியடைவார்கள் என்று அக்குழந்தைக்கு சந்தோஷி என்னும் பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.

சங்கடம் நீங்கி சந்தோஷம் தருவாள்  சந்தோஷி மாதா

இலாபமும், சுபமும் சகோதரிக்கு சக்தியும், செல்வச்செழிப்பும், கல்வி ஞானமும் கிடைக்கட்டும் என்று வாழ்த்தினார்கள். மேலும் தங்கள் சகோதரியை யார் வணங்கினாலும் அவர்களுக்கு பொன்னும் பொருளும் அளித்து அறிவாற்றலுடன் திகழ்வார்கள் என்றும் கூறினார்கள்.

சந்தோஷி வெள்ளிக்கிழமை பிறந்ததால் அன்றைய தினமே அவளை வழிபட உகந்தது என்றும் அன்றைய தினத்தில் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.வெள்ளிக்கிழமை அன்று சந்தோஷி மாதாவை நினைத்து விரதம் இருந்தால் பலன் நிச்சயம் என்கிறார்கள். தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகள் விரதம் இருந்து இந்த பூஜையை நிறைவு செய்தால் வேண்டிய அனைத்தும் தடையின்றி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

எளிமையான விரதமாக இருந்தாலும் பலன் என்னமோ பன்மடங்கு. வெள்ளிக்கிழமை அதிகாலை எழுந்து பூஜையறையைச் சுத்தம் செய்து தூய்மையாக்கவும். மேடை மீது சந்தோஷி மாதா புகைப்படம் வைத்து நறுமணமிக்க மலர்களைச் சூடவும். படத்தின் முன்பு குத்துவிளக்கேற்றி கலச சொம்பில் நாணயம் இட்டு மஞ்சள், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பிறகு கலசத்தில் மாவிலை செருகி தேங்காயில் மஞ்சள் குங்கு மம் தடவி அலங்கரித்து வைக்க வேண்டும்.

மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து கலசத்துக்கு அருகில் வைக்கவும். நைவேத்யத்துக்கு வெல்லம் கலந்த வறுகடலை முக்கியம். வேண்டு தலை மனதில் நிறுத்தி பிள்ளையாருக்கு பூஜை செய்ததும் சந்தோஷி மாதா கதையை பக்தியோடு படிக்க வேண்டும். அல்லது  பிறர் படிக்க கேட்கவேண்டும்.

சந்தோஷி மாதா ஸ்தோத்திரம் பாடி முடித்ததும் அன்றைய பூஜையை நிறைவேற்றிய பிறகு கலச நீரை  தீர்த்தமாக அருந்தி எஞ்சியவற்றை துளசி செடியில் ஊற்றவேண்டும். இப்படி தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறும் வரை வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வேண்டுதல் நிறைவடைந்ததும்  வெளியாருக்கு அன்னதானம் மட்டுமே கொடுக்கவேண்டும்.

புளி, மோர், தயிர் என புளிப்பு மிக்க உணவு பொருள்களைச் சேர்க்காமல்  இருக்க வேண்டும். அன்னதானத்திலும் இப்பொருளை சேர்க்ககூடாது. சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாக சந்தோஷி மாதா நிச்சயம் அருள் புரிவாள். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP