வீட்டு வாசல் படியில் இதை செய்யாதிங்க !! செஞ்சா , இந்த பிரச்சனைகள் வரும்...

வீட்டு வாசல் படியில் இதை செய்யாதிங்க !! செஞ்சா , இந்த பிரச்சனைகள் வரும்...

வீட்டு வாசல் படியில் இதை செய்யாதிங்க !! செஞ்சா , இந்த பிரச்சனைகள் வரும்...
X

நம்முடைய வீடுகளில் நகத்தை கிள்ளி போடக் கூடாது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால், தப்பித் தவறி கூட நாம் வெட்டக் கூடிய  நகமானது, நில வாசல்படியில் விழக் கூடாது என்று , சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

நில வாசல்படியின் மேல் அமர்ந்தும் நகத்தை வெட்ட கூடாது. நம்மை அறியாமல் நில வாசல்படியில் விழக்கூடிய நகம், நமக்கு அதிகப்படியான சுமையை தேடித்தரும். தரித்திரத்தை உண்டாக்கிவிடும். இதே போல் பெண்கள் தலை சீவும் முடி, எக்காரணத்தைக் கொண்டும் நில வாசல்படியின் மேல் போய் ஒட்டிக் கொள்ளக் கூடாது.

சிலரது வீட்டில் எல்லாம் நாம் பார்த்திருப்போம். துடைக்கும் போது வாசக்காலில் முடி போய் ஒட்டிக் கொள்ளும். நில வாசல்படியில் முடி ஒட்டினால் அது பெரிய தோஷத்தை ஏற்படுத்தி விடும். வீட்டை சுத்தம் செய்யும் போது நில வாசல்படியை ஒரு துணி கொண்டு கையால் தான் சுத்தம் செய்ய வேண்டுமே தவிர , மாப் அல்லது துடைப்பத்தால் சுத்தம் செய்யக்கூடாது.

நிறைய பேர் வீடுகளில் வீடு முழுவதும் இருக்கும் குப்பைகளை அப்படியே கூட்டி நில வாசல்படிக்கு கொண்டு வந்து, துடைப்பத்தால் நிலை வாசற் படியில் இருந்து வெளியே தள்ளுவார்கள். அதாவது முறம் கொண்டு வார மாட்டார்கள். துடைப்பத்தாலேயே, அப்படியே வெளிப்பக்கமாக தள்ளி விட்டு, வீட்டிலிருந்து வெளியே தள்ளிய குப்பைகளை ரோடு வரை கூட்டி செல்வார்கள்.

இது மிகப் பெரிய தவறான பழக்கம். வீட்டில் இருக்கும் குப்பையை, குப்பை முறைத்தால் வாரி தான், வெளியே கொட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தினம் தோறுமே நில வாசல்படியை ஈரத்துணியால் துடைத்து விட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, இரு கைகளை கூப்பி கும்பிட்டு, நில வாசல் படியை தொட்டு கண்களில் ஒத்திக் கொண்டு, வழிபடுவது மிகவும் நல்லது.

நில வாசல்படியின் இரு பக்கங்களிலும் தாமரைப் பூ இதழ்களை வைப்பது மிக மிக சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது. முழு தாமரையை கூட வைக்க வேண்டாம். ஒரே ஒரு தாமரையை வாங்கி உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள்.

தினம்தோறும் அதிலிருந்து இரண்டு இதழ்களை கிள்ளி, நில வாசல்படியின் இரண்டு பக்கத்திலும் வைத்து, வழிபட்டு வந்தாலே போதும். வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைக்கும் சுலபமான நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

Newstm.in

Next Story
Share it