Logo

இதை செய்து பாருங்கள் , எல்லா வித சந்தோசங்களும் உங்கள் வாழ்நாளில் கிடைக்கும் !!

 | 

வாழ்நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சி வேண்டுமெனில் யாருக்கேனும் உதவுங்கள். பல நூற்றாண்டுகாலமாக சிந்தனையாளர்கள் பலர் பரிந்துரைத்த மகிழ்ச்சிக்கான வழி பிறருக்கு உதவுவது.

காக்கைக்கு சோறிடுவது தொடங்கி ஒரு குழந்தை அதன் பிறந்தநாளுக்கான இனிப்பை பிறரோடு பகிர்வது போன்ற எல்லா சடங்குகளும், பழக்க வழக்கங்களும் பிறருக்கு கொடுப்பதை முன்னிலைப்படுத்தி நம் மனதில் பதியவைக்க பட்டவை தான்.

பிறருக்கு கொடுப்பது என்பது வெறும் நிறைவு மற்றும் கிடையாது. ஆரோக்யமான , செழிப்பான வளமான மற்றும் அர்தமுள்ள வாழ்வாக இருப்பதற்கான தீர்வு. எவ்வளவு கொடுத்தோம் என்கிற அளவீட்டை காட்டிலும் கொடுக்கப்பட்டவையில் நம் அன்பு எப்படியானது என்பதை கருத்தில் கொள்வதும் அவசியம்.

பெறுபவர்களுக்கு பணத்தை விடவும் ஒருவரின் இருப்பும், உயிர்ப்பும் மிக தேவையானதாக இருக்கிறது. நம் அனைவரிடமும் ஒரே அளவிலான பணம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரே அளவிலான நேரம் இருக்கிறது.

சில உதவிகள் நம் இருப்பால் மட்டுமே செய்யக்கூடியவை. அதை நம் நேரத்தை ஒதுக்கு நிறைவு கொள்வோம். நண்பர்கள் சிலர் உங்கள் கொடுக்கும் பண்பை அறிந்து, சில நிதி உதவிகளை கோருவார்கள்.

அவர்களிடம் மறுப்பு தெரிவிக்க தயங்கி செய்யப்படும் உதவிகளால் மனதிற்க்கு மகிழ்வு ஏற்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது. எனவே கேட்டார்கள் கொடுத்தோம் , என்பதை காட்டிலும் அதற்கென நேரம் ஒதுக்கி , சிந்தித்து நம் கொடுக்கும் தன்மைக்கான மதிப்பை உணர்ந்து அதை சரியான இடத்தில் சென்று சேர்பது நம் மகிழ்வின் அடர்த்தியை கூட்டும். நம் மகிழ்வும் நிறைவும் அதிகரித்தால் அது ஒரு சமூகத்திற்கும் பயனளிக்கும்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP