Logo

தீபாவளி ஸ்பெஷல் - ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தன்திரேயாஸ் திருநாள்

தீமைகளுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமானது பத்து அவதாரங்களாகும். அவை தசாவதாரம் எனப் போற்றப்படுகின்றன.
 | 

தீபாவளி ஸ்பெஷல் - ஆரோக்கியத்தை அள்ளித்தரும்  தன்திரேயாஸ் திருநாள்

திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்கள் தசாவதாரம் எனப் போற்றப்படுகிறது.மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்களே தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன. 

இதைத் தவிர தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து அதன் மூலம், மக்களுக்கு வாழ்க்கைத் தத்துவங்களை  எடுத்துக் கூறியுள்ளார். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது. தன்வந்திரி அவதாரமே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவனே மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற உயரிய தத்துவத்தை இந்த அவதாரம் எடுத்துக்காட்டுகிறது. ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை கோபத்திற்கும் அதனால் கொடுக்கக்கூடிய சாபத்திற்கும் பேர் போன துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்து நின்றான்.இழந்ததை மீண்டும் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு மந்திரமலையை மத்தாகவும்,வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு,அங்கிருந்தவர்கள் அனைவரும் இருபுறமும் சரிபாதியாகப் பிரிந்து நின்றவாறு,பாற்கடலைக் கடைந்தான் தேவேந்திரன்.அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் முதலில் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டன் ஆனார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனிதமான பொருட்கள் வந்தன.பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட்களையும் பெற்று தேவலோகம் சென்றான்.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளே திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்” என்று வட மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திர யோதசி என்றும் கொண்டாடப்படுகிறது.

இதற்குப் பின்னும் ஒரு கதை உள்ளது.ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.இதை அறிந்த அவன் மனைவி தன்திரேயாஸ் நான்காம் நாள் இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகளை ஏற்றி, நடுவே தங்க ஆபரணங்களையும் வைத்து, கணவனுடன் அமர்ந்து, புராணக் கதைகளைக் கூறிஅ வனை தூங்க விடாது கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.பாம்பு உருவில் வந்த எமன் தீப ஒளியிலும், ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலை வரை காத்திருந்துவிட்டு அவன் உயிரை கவர முடியாமல்  திரும்பினான். தன்வந்திரி அவதார நாளன்று தன்னைச் சுற்றிலும் யம தீபங்கள் ஏற்றி, தன்னை தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணமென்று மன்னன் முழுமையாக நம்பினான்.அதனால் மக்கள் அனைவரும் அன்று இரவு யம தீபம் ஏற்றி தன்திரேயாஸ் நாளைக் கொண்டாட வேண்டுமென்று உத்தரவிட்டான்.

முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சன்னதி உள்ளதை இன்றும் நாம் காண முடியும். தீபாவளித் திருநாளில் தன்வந்திரி பகவானை வணங்கி நல் ஆரோக்கியத்தை நாம் அனைவரும் பெறுவோமாக.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP