நிறைகளை கொண்டு நிறைவாய் வாழுங்கள்...

நிறைகளை மட்டுமோ அல்லது குறைகளை மட்டுமோ கொண்ட ஜீவராசிகள் என்று இறைவனின் படைப்பில் எதுவுமே இல்லை. நாம் தான் இறைவன் கொடுத்திருக்கும் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டுமே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறோம்.

நிறைகளை கொண்டு நிறைவாய் வாழுங்கள்...
X

நிறைகளை மட்டுமே கொண்ட மனிதர்களும் இல்லை. குறைகளை மட்டுமே கொண்ட மனிதர்களும் இல்லை. அப்படியே நிறைகளை மட்டுமோ அல்லது குறைகளை மட்டுமோ கொண்ட ஜீவராசிகள் என்று இறைவனின் படைப்பில் எதுவுமே இல்லை. நாம் தான் இறைவன் கொடுத்திருக்கும் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டுமே நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறோம்.

கார்மேகக் காலம் அது. காட்டில் மயில் ஒன்று தன்னுடைய தோகையை விரித்து மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தது. அதனுடைய மகிழ்ச்சி யைக் கண்டு மற்ற உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ள எல்லாமே உடன் சேர்ந்து ஆடியது. மயிலின் கொண்டாட்டம் அதிகமாகவே தன்னுடைய குரலால் பாடியது.

அப்போது அங்கிருந்த குயில் ஒன்று மயிலைக் கண்டு ஏளனமாக சிரித்தது. இவ்வளவு நேரம் உன்னுடைய அழகைக் கண்டு மயங்கியிருந்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது உன் குரல் எவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கிறது என்று இனி தயவு செய்து பாட மட்டும் செய்யாதே என்று அழகிய குரலில் கூறியது. அதைக் கேட்ட எல்லா விலங்குகளும் ஆமோதித்தது. மயிலுக்கு மிகவும் அசிங்கமாகிவிட்டது.

மயிலின் கோபம் இறைவன் மீது திரும்பியது. என்ன அழகு இருந்து என்ன பிரயோஜனம் என் குரலை இவ்வளவு மோசமாக படைத்துவிட்டாரே என்று மன அமைதி இழந்தது. அடுத்து வந்த நாள்களில் இதுவரை இருந்த மகிழ்ச்சியை தொலைத்து விட்டிருந்தது மயில். சர்வ சதா காலமும் தன்னுடைய குரல் சரியாக இல்லை என்ற எண்ணத்தோடு கவலையோடு இருந்தது.

நிறைகளை கொண்டு நிறைவாய் வாழுங்கள்...

மயிலின் கவலையைக் கண்ட அதன் நண்பனான முயல் எவ்வளவு தேற்றியும் மயிலை மீட்க முடியவில்லை. சரி இனி நம் கையில் ஒன்று மில்லை என்று நினைத்த முயல் மயிலிடம் இனி உன் குறையை இறைவனால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும். அதனால் இறைவனையே சந்தித்து கேள் என்றது. ஆனால் அதற்கு நீ கடுமையாக தவம் இருக்க வேண்டும் என்றது.

மயிலுக்கு எப்படியாவது இறைவனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அது இறைவனை நினைத்து தவம் புரிய ஆரம்பித் தது. மயிலின் தவத்தில் மெச்சிய இறைவன் மயிலின் முன் தோன்றினர். உனது தவத்தால் நான் மனம் மகிழ்ந்தேன். எதற்காக என்னை அழைத் தாய் என்று கேட்டார்.

என் குரலை கேட்கவே எனக்கு பிடிக்கவில்லை.குயிலின் குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படியொரு குரலை கொடுத்தீர்கள் என்று கேட்டது. இறைவன் புன்னகையோடு கூறினார். நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய். உன்னுடைய பரந்து விரிந்த தோகையை எந்தப் பறவையாவது கொண்டிருக்கிறதா? உன் கழுத்து அழகும் தோகை அழகும் போதுமே. பறவையினத்தில் நீ தான் அழகு என்று கூற. உன் அழகை முதலில் புரிந்து கொள் என்றார்.

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இறைவா. ஆனால் என் குரலும் அழகாக இருந்தால் நான் அழகிலும் என் குரலிலும் சிறந்து இருந்திருப்பேனே என்றது. இறைவன் பொறுமையாக விளக்கினார். எல்லா குணங்களும் ஒருவருக்கே அமையாது. நிறையோடு சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். பறவையினங்களில் குயிலுக்கு குரல் இனிமை. கழுகு வலிமையுடையது கிளி பேசும் திறன் கொண்டது. உன் இனம் அழகிய தோற் றத்தைக் கொண்டது. இப்படித்தான் எல்லா உயிரினங்களும் நிறைகளை நிறைவாகவே கொண்டிருக்கிறது.

குறைகளைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால் நிறைகள் ஒன்று நிறைந்திருப்பதையே மறந்துவிடுவோம். உனது நிறைகளை மேலும் வளர்த்துக் கொண்டு அதை நினைத்து மனதை அமைதிப்படுத்து ஆனந்தமாய் வாழ்வாய் என்றார். மயிலும் புரிந்துகொண்டது.

மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கும் நிறைகளை நினைத்து மகிழ்ச்சியடையாமல் இல்லாததை நினைத்து ஏங்கி கொண்டு மனதை யும் வருத்திக்கொண்டிருக்கிறோம். நிறைகளைப் பார்த்து நிறைவாக வாழ கற்றுக்கொண்டால் வாழ்க்கை முழுதும் இனிமைதான்.

newstm.in

newstm.in

Next Story
Share it