Logo

கூற்றுவ நாயனார் -63 நாயன்மார்கள்

வலிமையும் வீரமுமிக்க கூற்றுவர் நினைத்திருந்தால் தில்லைவாழ் அந்தணரை வென்றோ வீழ்த்தியோ முடி சூட்டிக்கொள்ள முடியும்.
 | 

கூற்றுவ நாயனார் -63 நாயன்மார்கள்

களந்தை என்னும் பகுதியில் குறுமன்னன் குலத்தில் பிறந்தவர் கூற்றுவர். சிவன் மீது தீராத பக்தியை உடையவர். சிவனுக்கு பிரியமான ஸ்ரீ பஞ் சாட்சர மந்திரத்தை உரிய முறையில் மகிழ்வோடு சொல்பவர். சிவனிடம் கொண்ட பிரியத்தை சற்றும் குறைக்காமல் சிவனடியார்களிடம் வெளிப்படுத்தும் சிறந்த பக்தர் இவர்.

சிவன் மீது கொண்ட பற்றினாலும் சிவபெருமான் இவர் மீது கொண்ட பற்றினாலும் நான்கு சேனைகளையும் குறையின்றி செழிக்க பெற்றிருந்தார் கூற்றுவர். வீரத்திலும் சிறந்து விளங்கிய கூற்றுவர் தம்முடைய வலிமையால் போர் புரிந்து பல அரசர்களையும் வென்று அவர்களது நாடுகளைக் கைப்பற்றினார்.

சிவனதுஅருளால்  அரசர் திருமுடி ஏந்த விரும்பினார். உலகை ஆளும் பொருட்டு தமக்கு முடிசூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணர்க ளிடம் கோரினார். ஆனால் வீரத்தில் சிறந்தவனாக இருந்தாலும் நாங்கள் சோழக்குலத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே முடி சூட்டுவோம் என்று உறுதியாக மறுத்தார்கள் தில்லைவாழ்அந்தணர்கள். மேலும் தங்களது குடியில் ஒருவருக்கு மணிமுடி காவல் செய்ததோடு கூற்றுவருக்கு அஞ்சி சேரநாட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

இதனால் மனம் வருந்திய கூற்றுவர் தம் மனம் கவர்ந்த எம்பெருமானாகிய சிவபெருமானை தஞ்சம் அடைந்தார். எம்பெருமானே இந்த அடியேனுக்கு தமது திருவடியையே முடியாக தந்தருள வேண்டும். அடியேனுக்கு அந்தப் பாக்கியம் கிட்டுமா என்று மனமுருக வேண்டினார். அன்றிரவு அவர் உறக்கத்தில் இருந்தபோது அவருக்கு காட்சி தந்த சிவபெருமான் அவரது திருவடியை முடியாக சூட்டியருளினார். கூற்றுவர் இறைவனின்  திருவடியை முடியாக சூடி பூமி முழுவதையும்  ஆட்சி புரிந்தார்.

சிவபெருமான் கூற்றுவர் மீது கொண்டிருந்த பக்தியையும் அவரது அருளையும் உணர்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தினார்கள். வலிமையும் வீரமுமிக்க கூற்றுவர் நினைத்திருந்தால் தில்லைவாழ் அந்தணரை வென்றோ வீழ்த்தியோ முடி சூட்டிக்கொள்ள முடியும். ஆனால் இவர் அவ்வாறு விரும்பாமல் சிவபெருமான் திருவடியையே நாடினார். அதையே முடியாக பெற்றார். இவரே கூற்றுவ நாய னார் என்று அழைக்கப்படுகிறார். 

கூற்றுவர்  சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து சிவனுக்கும் அடியார்களுக்கும் திருப்பணி செய்து வந்தார். பிறகு சிவபெருமானிடம் சரண்புகுந்தார். சிவாலயங்களில் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று  இவருக்கு குருபூஜை கொண்டாடப்படுகிறது.


newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP