சண்டேசுவர நாயனார் தொடர்ச்சி...

இனி யாம் சூடுவன, உடுப்பன, உண்ணுவன அனைத்து பரிகலமும் உனக்கே என்று அருள் வழங்கி தம் திருமுடியிலிருந்த கொன்றை மலரை விசாரசருமருக்கு தம் திருக்கைகளாலேயே அணிவித்தார்.

சண்டேசுவர நாயனார் தொடர்ச்சி...
X

விசாரசருமர் பசுக்களை மேய்க்க தொடங்கியதும் பசுக்கள் அவர் மீது அன்பை சொறியும் வகையில் அவரைக் கண்டதும் தானாகவே பாலை சுரந் தது. ஒருநாள் மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது பசு பால் சொறிந்ததும் இவருக்கு சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன என்று தோன்றியது. அவர் அமர்ந்திருக்கும் மரநிழலிலேயே சிவலிங்கம் அமைக்க விரும்பினார்.

மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணலைக் கொண்டு வந்து லிங்கம் ஒன்றை வடித்தார். மண்ணாலே மதிற்சுவர்களை எழுப்பி சிறு கோபுரங்களுடன் கூடிய சிறிய ஆலயத்தை அழகுற வடிவமைத்தார். அதை மேலும் அழகாக்கும் வகையில் நறுமண செடிகளையும், கொடிகளை யும் அழகுக்காக வைத்தார். அக்கோயிலும் சிவலிங்கமும் அவர் மனத்தில் சொல்லாணா ஆனந்தத்தை உண்டுபண்ணியது.

இன்னும் என்ன சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதுதான் என்று நினைத்த விசாரசருமர், பரமனுக்கு பூக்களைப் பறித்துவந்தார். பசுக்கள் கறந்த பாலை சேமித்து வேதங்கள் ஓதி லிங்கத்துக்கு பூஜை செய்தார். அனுதினமும் மண்ணையாற்றில் சிவனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தது.

சேய்ஞலூர் பரமனின் பாதத்தை விசாரசருமனின் மண்ணயாற்று லிங்க அபிஷேகம் ஈர்த்தது. பக்தனின் அன்புக்கு அடிபணிந்து மண்ணையாற்று லிங்கத்திலும் குடிபுகுந்தார் சிவனார். நாளொரு மேனியுமாய் பசுக்கள் வளமோடு வளர்ந்தது. முன்னை விட பால் சுரப்பையும் அதிகரிக்க செய் தது. இதனால் பசுக்களுக்கு சொந்தக்காரர்கள் மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் விசாரசருமர் லிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தவதைக் கண்ட அந்த ஊரிலிருந்த ஒருவன், நேராக வந்து என்ன செய்கிறாய் பாலை யெல்லாம் வீணாக்குகிறாயே என்று கேட்டான். ஆனால் பக்தியில் திளைத்திருந்த விசாசருமருக்கு எதுவும் காதில் விழவில்லை. அவர் எதுவும் பேசாததால் ஆத்திரமடைந்த அவன் பசுவின் உரிமையாளர்களிடம் சென்று நடந்ததைப் பற்றி கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அனைவருக்கும் ஆத்திரம் வந்தது. விசாரசருமனின் தந்தை எச்சதத்தனை அணுகி, மகன் மடத்தனம் செய்வதாக கூறினார்கள். எச்சதத்தனும் மகனை கண்டிப்பதாக கூறினார். மறுநாள் மாடு மேய்க்க சென்ற மகன் அறியாதவாறு எச்சதத்தன் பின் தொடர்ந்தார். மண்ணையாற்றை அடைந்ததும் மரத்தின் மறைவில் மறைந்துகொண்டார்.

விசாரசருமர் வழக்கம் போல் நறுமணமிக்க மலர்களைக் கொய்து மண்ணால் லிங்கத்தை செய்து மலர் சூடி குடங்களில் பாலை நிரப்பிக் கொண் டார். சிவபக்தியில் ஈடுபட்டார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக்கொண்டிருந்த எச்சதத்தனுக்கு கோபம் தலைக்கேறியது. ஆத்திரத் தால் அறிவை இழந்த எச்சதத்தன் மரத்தின் குச்சியை ஒடித்து சென்று விராசருமரின் முதுகை பதம் பார்த்தார். ஆனால் பக்தியில் இருந்த விராசர் எதையும் உணரும் நிலையில் இல்லை.

எச்சதத்தன் வசவு வார்த்தைகளும், அடியும் அவர் மனதைப் படவேயில்லை என்பதை உணர்ந்து மேலும் விராசர் மீது கோபம் அதிகமாகியது. அபி ஷேகப் பாலின் மீது தன் கவனத்தை திருப்பிய எச்சதத்தன் அந்தப் பாலை பலம் கொண்ட மட்டும் எட்டி உதைத்தார். அதுவரை பக்தியில் இருந்த விசாரருக்கு தந்தையின் செயல் கடுங்கோபத்தை வரவழைத்தது. அருகே கிடந்த கோலை எடுத்து பாலை தள்ளிய கால்களின் மீது வீசினார். கோல்கள் கழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சதத்தன் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நடந்ததை எதுவும் அறியாமல் மீண்டும் லிங்கத்தைப் பூஜிப்பதில் கவனம் செலுத்தினார் விசாரசருமர். அவரது பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையாளோடு காட்சிதந்து விசாரசருமரைக் கட்டியணைத்தார். எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டி சாய்த்த உமக்கு இனி நானே தந்தை, நானே தாய் என்றார். அவரது அரவணைப்பில் பெருமகிழ்வு அடைந்தார் விசாரசருமர்.

சிவபெருமான், விசாரசருமருக்கு அடியார்களுக்கெல்லாம் தலைவனாகும் பேறை அளித்தார். சண்டி சபதம் என்னும் பதவியை அளித்தார். இனி யாம் சூடுவன, உடுப்பன, உண்ணுவன அனைத்து பரிகலமும் உனக்கே என்று அருள் வழங்கி தம் திருமுடியிலிருந்த கொன்றை மலரை விசார சருமருக்கு தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சிவனது திருவாயால் சண்டிபதம் பெற்ற விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று அழைக் கப்பட்டார். சிவாலயங்களில் தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Next Story
Share it