’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ பட பைலட் டீசர்!

’மூடர் கூடம்’ புகழ் நவீனின் ’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ படத்தின் பைலட் டீசரை, நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டார்!
 | 

’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ பட பைலட் டீசர்!

’மூடர் கூடம்’ புகழ் நவீனின் ’அலாவுதீனின் அற்புதக் கேமரா’ படத்தின் பைலட் டீசரை, நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டார்! 

பிளாக் காமெடி டைப்பில் வந்த 'மூடர் கூடம்’ படம் மூலமாக தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் நவீன், தற்போது ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்கிற படத்தை இயக்கி, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். 

ஒரு புகைப்படக் கலைஞனின் வாழ்க்கையில் நடக்கும் அற்புதங்களை சொல்லும் இந்தப் படத்தில் புகைப்படக்கலைஞன் கதாப்பாத்திரம் ஏற்று கதையின் நாயகனாகவும் நடிக்கிறார் நவீன். இதில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில், ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் பைலட் டீசரை, நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP