'கண்ணகிக்கு பிறந்தவங்க தான் இருக்கனும்' - தேவராட்டம் டீசர்

நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது, தேவராட்டம் என்ற படத்தில் நட்டித்து வருகிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

'கண்ணகிக்கு பிறந்தவங்க தான் இருக்கனும்' - தேவராட்டம் டீசர்

குட்டிபுலி, கொம்பன், மருது போன்ற குறிப்பிட்ட சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது தேவராட்டம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். 

இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா. மதுரையை கதை களமாகக் கொண்ட இதன் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஃப்ரேமுக்கு ஃப்ரேம் பாய்ந்து அடிப்பதும், "இந்த உலகத்துல கண்ணகிக்கு பிறந்தவங்க தான் இருக்கணும், காந்தாவுக்கு பிறந்தவங்க இல்ல" என்ற ஆகப்பெரும் தத்துவத்தை ஹைலைட் செய்து காட்டுவதும் அந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. 

விரைவில் படத்தைப் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP