{"vars":{"id": "106785:4629"}}

மூத்த பத்திரிக்கையாளர் சுதாங்கன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

 

மூத்தப் பத்திரிக்கையாளர் சுதாங்கன், தினமணி, விகடன் குழுமங்களில் பணியாற்றியவர். சில தொலைக்காட்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். 1986ம் ஆண்டு கொல்கத்தாவின் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் விருதை பெற்றவர்.

இவர் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், ஒரு தொடர்கதை எழுதியுள்ளார். சுதாங்கனுக்கு ஆகாஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். அவரது மனைவி சாந்தி 2006ஆம் ஆண்டு காலமானார்.

இந்நிலையில் மூத்தப் பத்திரிக்கையாளர் சுதாங்கன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைப் பலன்றி உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுதாங்கன், பல விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in