{"vars":{"id": "106785:4629"}}

#JUST IN: நாளை மொத்தம் 21 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!

 

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூரில்,அரியலூர், தஞ்சாவூர்,பெரம்பலூர்,திருவாரூர்.மயிலாடுதுறை,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம்,நாமக்கல்,திருவண்ணாமலை, தருமபுரி,நாகை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல், கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.



மேலும், ஊரகத் திறனாய்வு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தேர்வு துறை இயக்குநர் அறிவித்துள்ளார். வருகிற 10-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு வருகிற 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.

நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) நடைபெறவிருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மக்கள் அவசர தேவைக்கான உதவி எண்கள் - 1913, 044-2561 9206, 044-2561 9207, 044-2561 9208, 9445477205.