{"vars":{"id": "106785:4629"}}

'மீரா மிதுன் மரணம் குறித்து விசாரணை' - ட்விட்டர் பதிவால் எழுந்த சர்ச்சை !!

 

மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.

ஆனால் தவறான தகவல்களை வழங்கி போட்டியில் கலந்து கொண்டதால் அவருக்கு வழங்கிய பட்டத்தை திரும்ப பெற்றது பெமினாஸ் அமைப்பு.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதிலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அட்டைப்படங்களுக்காக நடத்திய கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அதோடு தன்னுடைய கவர்ச்சியான செல்பி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் " தான் இறந்து விட்டதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது RIP" என்று பதிவிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். இதனால் சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் இணையவாசிகள் பலரும், மகிழ்ச்சி அடைந்தனர். இனி எலி தொல்லை இருக்காது என கிண்டலடித்து கமெண்ட் அடித்து கலாய்த்து தள்ளியுள்ளனர்.