{"vars":{"id": "106785:4629"}}

கொரோனா பாதிப்பு : உலக அளவில் 3ஆவது இடத்திற்கு சென்ற இந்தியா!

 

உலக அளவில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 29 லட்சம் பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில் நிலையில், தினசரி நோய் பரவல் வேகம் எடுத்ததால் தற்போது இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது. ரஷ்யாவில் 6 லட்சத்து 81 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாவது இடத்தில் பெரு உள்ளது. அங்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

newstm.in