{"vars":{"id": "106785:4629"}}

மகனை மின் விசிறியில் கட்டித் தொங்கவிட்ட தந்தை! காரணம் இதுதான்!!

 

ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்யாத மகனை தந்தை மின் விசிறியில் கட்டித் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாபி பகுதியைச் சேர்ந்த முரட்டுக் குணம் கொண்ட அந்த தந்தை, தனது மகள் மற்றும் மகன் மீது இப்படிதான் கொடூரமாக நடந்து கொள்கிறார் என அவரது தாய் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடக்கும்போது, கணவனின் கொடூரச் செயல் குடும்பத்தினருக்குத் தெரியவேண்டும் என்று அதை செல்போனில் வீடியோ எடுத்து தனது உறவினர்களிடம் காட்டியுள்ளார்.

இதைப்பார்த்த அவரது சகோதரர் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தெரிவித்துள்ளார். கணவன் மீது யாரும் புகார் கொடுக்காத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மகனை மின்விசிறியில் கட்டித் தொங்கவிட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in