{"vars":{"id": "106785:4629"}}

ஆபத்து! உங்கள் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் இருக்கிறதா? உஷார்!

 

பெண் பொறியாளரின் புகைப்படத்தை ஆபாச தளத்தில் வெளியிட்டு அவருக்கு ரேட் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 40 வயது பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அவர் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார்.

அதை எடுத்த சில விஷமிகள் ஆபாச வெப்சைட்டில் அப்லோட் செய்தனர். போட்டோ அருகே வேறு ஒருவர் போன் நம்பரையும் வெளியிட்டனர். அதைப் பார்த்த பெண்ணின் நண்பர்கள் இதுகுறித்து அந்த பெண்ணிடம் தெரிவித்தனர்.

மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது நண்பர்களை விட்டு அந்த போன் நம்பருக்கு போன் செய்ய சொன்னார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் அந்த போட்டோவில் இருந்த பெண்ணுக்கு ரேட் பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு முறைக்கு 5000 ரூபாய் என்றும், ஒரு இரவுக்கு 15000 ரூபாய் என்றும் அவர் கூறியதை கேட்டு பெண்ணும், நண்பரும் அதிர்ந்து போனார்கள். அட்வான்ஸ் தொகை 7000 அனுப்ப சொல்லி ஒரு வங்கி கணக்கை தந்தார் அந்த நபர்.

இதனால் கடும் மன வேதனைக்கு உள்ளான அந்தப்பெண் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

newstm.in