#BREAKING தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் - தீவிரமாகும் மழை !
Oct 29, 2020, 09:26 IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வடபழனி, அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்து. அதன்படி சென்னையில் இன்றும், மாலையும் மலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
newstm.in