#BREAKING தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 1,47,324ஆக உயர்வு !
Jul 14, 2020, 19:22 IST
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியே பதிவாகி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும்4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது.
இதில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்குள் வந்த 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
newstm.in