#BREAKING: தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!!
Mar 18, 2023, 12:06 IST
2008ல் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோது ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீடு ஒதுக்கியதாக புகார் எழுந்தது.
புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஐ.பெரியசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
விதிமுறைக்கு உட்பட்டே நிலம் ஒதுக்கியதாகவும், இதனால் வாரியத்துக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது. ஐ.பெரியசாமி தரப்பு வாதத்தை ஏற்று சென்னை சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து அவரை விடுவித்தது.