{"vars":{"id": "106785:4629"}}

16 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலன்!!

 

16 வயது கர்ப்பிணி சிறுமியை அவரது காதலனே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் ரஜாவ்லி என்ற பகுதியை சேர்ந்த சோனு குமார் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 16 சிறுமிக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

இருவரும் நெருக்கமாக பழகவே, சோனு குமார் மூலம் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து கர்ப்பம் குறித்து சிறுமி, சோனு குமாரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.




இதனால் சோனு குமார் சிறுமியிடம் பேசுவதை தவிர்க்கத் தொடங்கினார். ஆனால், சிறுமி, சோனு குமாரை விடாமல் வற்புறுத்தியதால் இருவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது.

அப்போது வாக்குவாதம் முற்றியதை அடுத்து, சோனு குமாரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இந்த கொடூர சம்பவத்தை சிறுமியின் பெற்றோரின் முன்னிலையில் அரங்கேற்றியுள்ளனர்.




கர்ப்பிணி சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சிறுமியின் குடும்பத்தினரை அடைத்து வைத்து, யாருக்கும் தெரியாமல் சிறுமியின் உடலை அடக்கமும் செய்தனர்.

4 நாட்களுக்கு பிறகு சிறுமியின் தந்தை அவர்களிடம் இருந்து தப்பிவந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சோனு குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

newstm.in