{"vars":{"id": "106785:4629"}}

அலர்ட்! அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து மழை!!

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் தொடங்கும் என்று மக்கள் அச்சத்துடன் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆங்காங்கே ஆலங்கட்டி மழையே பெய்து மண்ணை குளிர்வித்து வருகிறது. அதே நேரத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் பாதிப்பு சந்திக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும்.




24.03.2023 முதல் 26.03.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.03.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in