பட்ஜெட் 2023 - 24 : முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை..!!
Feb 1, 2023, 11:55 IST
- குழந்தைகள் இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக்கப்படும்
- சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்
- நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்
- 7.5 வட்டியில் பெண்களுக்கென பிரித்தியேகமாக சிறு சேமிப்பு திட்டம் அறிமுகம்
- பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக பயன்படும்
- ரயில்வே துறைக்கான நிதி - 2,04,000 கோடி ஒதுக்கீடு
- 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோவர்தன் திட்டத்தை அரசு அமைக்க உள்ளது
- சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு தனி டிஜிலாக்கர் உருவாக்கப்படும்
- 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்
- நலிந்த நிலையில் உள்ள பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.79,000 கோடி ஒதுக்கீடு
- பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்
- 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்
- வறட்சியை சமாளிக்க கர்நாடகாவிற்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- நாடு முழுவதும் 50 கூடுதல் ஏர்போட் மற்றும் தறையிரங்கும் தளம் அமைக்கப்படும்
- கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்துக்கு முன்னுரிமை அளித்து, விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.
- உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு