{"vars":{"id": "106785:4629"}}

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை அவசியம் எடுத்து கொள்ளுங்கள்..!!

 

பெண்கள் மாதவிலக்கு காலங்களில் வயிற்று வலி, முதுகு வலி, தசைப்பிடிப்புக்கள், உடல் அசதி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.இதனை சரிசெய்ய சிலர் வலி நிவாரண மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் தொடர்ந்து மாத்திரைகளை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் சீர்கெடும். மேலும் எதிர்பாராத பக்க விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதனை சீராக்க முதலில் அந்த நாட்களில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். துவர்ப்பு, மற்றும் கசப்பு தன்மையுடைய உணவுகள் மட்டும் கீரை வகைகளை நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிட வேண்டும். அதே நேரம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை பருகுவதும் அவசியம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் காலையில் காபி,டீயைத் தவிர்த்து வெறும் வயிற்றில் புளிக்காத மோரும் வெந்தயமும் எடுத்துக் கொள்ளலாம். இவை உடலுக்கு தேவையான சக்தியை அளித்து உடல் உறுப்புகளை சீராக இயங்கச் செய்கின்றன . வயிற்று வலியும் குறைவதையும் உணரலாம்.