{"vars":{"id": "106785:4629"}}

ஆண்மையை அதிகரிக்க இந்த பழத்தை சாப்பிடுங்க..!!

 

எல்லா பழக்கடைகளிலும் கிடைக்கும் ஒரு பொருள் என்றால் அது அத்திப்பழமும் ஒன்று. அதுமட்டுமல்ல. அதன் விலையும் சாதாரண மக்கள் வாங்கும் வகையிலே ஒரு கிலோ ரூ 50 முதலே கிடைக்கிறது. இந்த அத்திப்பழத்தை சத்தமின்றி சாப்பிட்பிட்டால், நித்தமும் மகிழ்ச்சியான தாம்பத்தியம் சத்தியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த அத்திப்பழம் அருமை குறித்து விசாரித்த போது, மிகவும் பெருமையாக இருந்தது. இதோ அதன் அளவிடமுடியாத பயன்கள். களிமண் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் அத்தி நன்கு வளரும். பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். அவை, சீமை அத்தி, நாட்டு அத்தி எனப்படும்.

அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதி அல்லது கிளைகள் பிரியும் இடத்தில் காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் மட்டுமே கிடைக்கும். கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்த முடியும். அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து என ஏராளமன சத்துக்கள் உள்ளது.

உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்வது, மனிதர்களுக்கு சுறுசுறுப்பாக வைப்பது, பித்தத்தை வெளியேற்றும், அத்திப்பழம் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், சிறுநீரகத்தில் கல்லடைப்பை நீக்கும். தலைமுடியும் நன்கு நீளமாக வளரும். இன்னும் ஏரளாமான நன்மைகளை அடுக்கிக் கெண்டே போகலாம்.

தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.ஆண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலுக்கு அளவற்ற ஆற்றல் கிடைக்கும். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டு சாப்பிட்டால், உடலில் நல்ல முறுக்கு ஏறுவதை பார்க்கலாம். குறிப்பாக, திருணமான ஆண்களுக்கு, வீரியம் ஆதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, அத்திப்பழம் கொடுப்பது வழக்கம். காரணம், அத்திப்பழத்தில் அதிக சக்தி உள்ளதால்.

இப்படி அளவற்ற ஆற்றல் கொண்ட அத்திப்பழம் நமது நாட்டில் மிக குறைந்த விலையில் கிடைப்பது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று மருத்துவர்கள் சிலாகித்து சொல்கிறார்கள்.