சித்திரையில் சூரிய ஒளியில் ஜொலிக்கும் பொன்லிங்க மேனிகள்...!

பூமி சூரியனைச் சுற்றிகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பூமத்ய ரேகையில் நடுக்கோட்டில் நிற்கும் சூரியனின் ஒளி பல திருத்தலங்களில் கருவறையில் உள்ள மூலவரின் மீது படுவது சித்திரை மாதத்தில் மிகவும் விசேஷமான ஒன்று.
 | 

சித்திரையில் சூரிய ஒளியில் ஜொலிக்கும் பொன்லிங்க மேனிகள்...!

சித்திரை மாதம் இறைவனுக்கு உகந்த மாதங்கள். பூமி சூரியனைச் சுற்றிகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பூமத்ய ரேகையில் நடுக்கோட்டில் நிற்கும் சூரியனின் ஒளி பல திருத்தலங்களில் கருவறையில் உள்ள மூலவரின் மீது படுவது சித்திரை மாதத்தில் மிகவும் விசேஷமான ஒன்று.. சூரிய பகவானே நேரில் வந்து அபிஷேகம் செய்வதாக பக்தர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்..

காட்டுமன்னார் கோவில் கால்நாட்டம் புலியூரில்  இருக்கும் பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சித்திரை முதல் தேதியன்று மூலவரின் மீது சூரிய பகவான்  தனது ஒளியை வீசி  படிப்படியாக கீழிறிங்கி சூரிய ஒளி பிரகாசத்தில் சிவலிங்கத்தைப் பொன்போல்  ஒளிரச்செய்கிறார். 

திருவாரூர் மாவட்டம், ஆண்டான் கோவில் என்னும் ஊரில் உள்ள சொர்ண புரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாதம் 11,12,13 ஆம் தேதிகளில் மூலவர் மீது சூரிய ஒளி படுகிறது. மதுரை மாவட்டம் ஆனையூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரதோஷத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. கடலூர் பரங்கிப்பேட்டை அகரம் கிராமத்தில் உள்ள அமிர்த வள்ளி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சித்திரை முதல் நாள் முதல் 7 ஆம் நாள் வரை சூரிய ஒளிபடுகிறது.. 

விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் உள்ள அருள்மிகு பனங்காட்டீஸ் வரர் கோயில் சூரியபகவான் வழிபட்ட தலம். தக்க்ஷன் சிவப்பெருமானைத் தவிர்த்து மேற்கொண்ட வேள்வியில் அவிர்ப்பாகம் உண்ட தேவர்கள் சிவபெரு மானின் கோபத்துக்கு உள்ளானார்கள். சிவபெருமானின் கட்டளைப்படி அகோர வீரபத்திரர் வேள்வி நடந்த இடத்துக்குச் சென்று தேவர்களுக்கு தண்டனை அளித்தார். அப்போது சூரிய பகவான் ஒளி இழந்தார். தனது சக்தியை மீண்டும் பெறுவதற்கு சிவத்தலங்களுக்குச் சென்று மன்னித்தருள வேண்டினார். அப்படி சூரியன் வழிபட்டு இழந்த சக்தியை மீண்டும்பெற்றது இத்தலத்தில்தான் என்று புராண வரலாறு சொல்கிறது. அதனாலேயே மாதங்களில் முக்கியமான சித் திரை  மாதம் முதல் தேதியன்று சூரியபகவான் தனது ஒளியை இறைவன் மீதும் இறைவி மீதும் படுமாறு செய்து இன்றுவரை வழிபடுவதாகவும் நம்பப்படுகிறது.

பனையைத் தலமாக கொண்டுள்ள ஐந்து  தலங்களுள் பனங்காட்டீஸ்வரர் தலமும் ஒன்று. இங்கு மூலவர் பனங்காட்டீஸ்வரர், இவர் கல்வெட்டுகளில் திருப்பனங்காட்டுடைய மகாதேவர், கண்ணமர்ந்த நாயனார், பரவை ஈஸ்வர முடைய மகாதேவன் என்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாயார் சத்யாம்பிகை.

ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாள் இறைவனின் சிரசுவில் இருந்து பாதம் வரை படும் சூரிய ஒளி ,பின்னர் மூலவருக்கு சற்று தொலை வில் இருக்கும்  அம்பாள் சன்னிதியில் தாயாரின் சிரசு முதல் பாதம் வரை பட்டு விலகும். இத்துடன் விசேஷ பூஜைகள் நிறைவடையும். நாளை சித்திரை முதல் நாள் தொடங்கும் விசேஷ பூஜை  தொடர்ந்து 7 நாட்கள் வரை நீடிக் கும். பக்தர்கள் மெய்மறந்து பொன்னால் ஜொலிக்கும் பனங்காட்டீஸ்வரைக் கண்டு தரிசிப்பார்கள்..

இயன்றால் இத்தருணத்தில் பனங்காட்டீஸ்வரரைத் தரிசியுங்கள். வளம் குன்றிய வாழ்வில்  மின்னும் வளம் சேர்ப்பார் இத்தல இறைவன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP