Logo

கண்ணியக் காதலைத் தந்த திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் அடிநாதமாக இன்றும் காதல்தான் உள்ளது. இந்த காதலை கண்ணியமாக காட்டியுள்ளன சில திரைப்படங்களை காதலர் தினமான இன்று ரீவைட் செய்து பார்ப்போம் வாருங்கள்...
 | 

கண்ணியக் காதலைத் தந்த திரைக்காவியங்கள்!

சினிமாவைப் பார்த்து இந்த காலத்து பசங்க ரொம்ப கெட்டு போய்ட்டாங்க... இளைய தலைமுறையை பார்த்து பெரியவர்கள் அதிகம் சொல்லும் டயலாக்குகளில் இதுவும் ஒன்று.

பள்ளிப் பருவ காதல்,  ஜாதி, மதம் தாண்டிய காதல், வயதில் மூத்த பெண் மீது காதல், கள்ளக் காதல், உறவுமுறை தவறிவரும் காதல் என காதலை அக்குவேறு ஆணிவேராக இன்னமும் பிரித்து கொண்டுதான் இருக்கிறது தமிழ் சினிமா.

சினிமாவை பார்த்துதான் இளைஞர்கள் கெட்டுபோகிறார்கள் என்றால்,  நல்ல கருத்துகளை சொல்லும் திரைப்படங்களே வரவில்லையா? அந்த கருத்துகளை எல்லாம் இந்த சமூகம் ஏற்றுகொள்ளதான் செய்கின்றதா?

இன்றைய சூழலில் சினிமா ஒரு என்டர்டெய்ன்மென்ட் அவ்வளவுதான்... சினிமாவை குறைச்சொல்ல வேண்டாம் என்பது கனவுத் தொழிற்சாலைக்கு வக்காலத்து வாங்குவோரின் வாதமாக  உள்ளது.

எது எப்படியோ...இன்றும் தமிழ் சினிமாவின் அடிநாதமாக காதல்தான் உள்ளது.  காதலை கண்ணியமாக காட்டியுள்ளன சில திரைப்படங்களை காதலர் தினமான இன்று ரீவைண்ட் செய்து பார்ப்போம் வாருங்கள்...

வார்த்தைகளே இல்லாமல் சொல்லப்பட்ட காதல்:  ஆண், பெண் பேதமின்றி இந்த உலகில் எல்லோருமே அன்புக்காகதான் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அன்பின் வாசமே அறியாத ஒரு ரவுடிக்கு ஒரு பெண்ணின் அன்பும், ஸ்பரிசமும் கிடைத்தால் அவனின் மனநிலை எப்படியிருக்கும்?
தன் நெற்றியில் பொட்டு வைக்க வரும் நாயகியின் கரத்தை பற்றி, தன் காதலை வார்த்தைகளே இல்லாமல் நாகரிமாக வெளிப்படுத்திருக்கும் நாயகனை "அமர்க்களம்" திரைப்படம் காட்டியிருக்கும்.

கண்ணியக் காதலைத் தந்த திரைக்காவியங்கள்!
காலில் விழ வைத்த காதல்:  பாடல் காட்சிகள், சோகக் காட்சிகள் என காதலர்களை திரையில் காண்பிக்கும்போது,இருவரும் ஆரத் தழுவுவது அல்லது  கட்டியணைப்பது போன்றோதான் பொதுவாக காட்சிகள் அமைக்கப்படும்.

இந்த வரையறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, தன்னிடம் ஊமையாக அறிமுகமான ஒரே காரணத்துக்காக, இறுதியில் நிஜமாக தன்னைத் தானே ஊமையாக்கிக் கொள்ளும் தன் காதலனை கண்டு வியந்து நெகிழும் காதலி, கிளைமாக்ஸில் அவனது காதலில் விழுந்து வணங்குவதன் மூலம் "சொல்லாமலே"  திரைப்பட இயக்குநர் சசி, காதலின் கண்ணியத்தை தூக்கிப் பிடித்திருப்பார்.

கண்ணியக் காதலைத் தந்த திரைக்காவியங்கள்!

பட்டாம்பூச்சி பிடித்த காதலர்கள்: தொடாமலும், கட்டிப் பிடிக்காமலும் காதல் வருவதில்லை என்ற சினிமா மற்றும் யதார்த்த வரையறையை மாற்றி, படம் முழுக்க நாயகனையும் ,நாயகியையும் தொடமாலேயே காட்டி "காதலுக்கு மரியாதை" செய்திருப்பார் இயக்குநர் ஃபாசில்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் நாயகன் மற்றும் நாயகியை அவர்களின் நண்பர்கள் தனிமையில் விட்டுவிட்டு, அவர்களின் நடவடிக்கைகளை ஆவலுடன் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், நண்பர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, நாயகனும் ,நாயகியும் சிறுபிள்ளைகள் போல் பட்டாம்பூச்சி பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

கண்ணியக் காதலைத் தந்த திரைக்காவியங்கள்!
கல்யாணம் ஆனாலும்...: இளமையில் வரும் காதல், திருமணத்தில்  முடிந்தாலும், முடியாவிட்டாலும் அந்த உணர்வு எப்போதும் சுகமான நினைவாகதான் இருக்கும். இதனை சேரனின் "ஆட்டோகிராஃப்" திரைப்படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸில் நாயகனின் திருமணத்தில் பங்கேற்கும் அவனின் காதலி, மணமக்கள் இருவருக்கும் மோதிரத்தை பரிசாக அளிக்கும் காட்சி கண்ணியக் காதலின் மற்றொரு வெளிப்பாடு.

கண்ணியக் காதலைத் தந்த திரைக்காவியங்கள்!
இப்படி காதலை கண்ணியமாக வெளிப்படுத்தும் படங்களின் பட்டியலிட்டால் அது காதல் எனும் முடிவிலியை போன்று நீண்டு கொண்டுதான் போகும். இதுபோன்ற திரைப்படங்களின் காதல் கற்பித்தல்களை காதலர்கள் தங்கள் நிஜவாழ்வில் கடைப்பிடிக்கலாமே!

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP