வைகோவுக்கு ஈரோடு வழியா அல்லது வலியா?

மதிமுகவுக்கு மற்றொரு பெரிய பலவீனம் வைகோவின் சமீபத்திய பல்டியும் மற்றும் ஸ்டாலினிடம் மண்டியிட்ட விதமும். அதனை மதிமுக தொண்டர்களும் ரசிக்கவில்லை. திமுக தொண்டர்களும் மதிக்கவில்லை. வேறு போக்கிடம் இல்லாமல் உள்ளே வந்த வைகோவின் நிலைமை தாலியறுத்த மகள் வீட்டில் கடைசி காலத்தைக் கழிக்கும் சம்பந்தியின் நிலை தான்.
 | 

வைகோவுக்கு ஈரோடு வழியா அல்லது வலியா?

திமுக கூட்டணியில், வைகோவின் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வைகோ இப்பொழுதும் தன்னை நம்பி அந்த ஒரு சீட்டை வாங்கவில்லை. ஈரோடு கணேசமூர்த்தியை நம்பியே வாங்கியிருக்கிறார் அல்லது கணேசமூர்த்தியின் செல்வாக்குக்காக மதிமுகவுக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில், கடந்தமுறை அடித்த மோடி அலையை அநாயசமாகத் தடுத்து வீசிய ஜெ புயலிலேயே கணேசமூர்த்தி, தன் முந்தைய தேர்தலில் பெற்ற ஓட்டினைவிட 30 ஆயிரம் ஓட்டுகள் தான் குறைவாகப் பெற்றிருந்தார். ஆனால், பாஜக ஆதரவுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம், அதிமுகவைவிட இரண்டு லட்சம் ஓட்டுகள் குறைவாக வாங்கியிருந்தார். 
வைகோவுக்கு ஈரோடு வழியா அல்லது வலியா?

இந்த முறை திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக கூட்டணி. அடிச்சு தூள் பண்ணப் போறாங்க ஈரோட்டு வாக்காளர்கள். விசிக இருக்கும் எந்தப் பக்கத்தையும் அவர்கள் இடதுகாலால் எத்தி எறிந்து விடுவார்கள். கம்யூனிஸ்ட்களால் கஷ்டப்பட்டுப் போய்கிடப்பதால், இவர்கள் பிரசாரத்திற்கு வந்தாலே போதும் திமுக கூட்டணி டமால் தான். பணால் தான்.

சாதகமான சூழல் என்று எடுத்துக் கொண்டால், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குக் கொஞ்சம் செல்வாக்குடைய பகுதி! ஆகவே, திமுக + கணேசமூர்த்தி + ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரின் பலத்தினால் ஜெயித்து விடலாம் என்று வைகோ கணக்குப் போட்டிருக்கலாம். 

எதிர்தரப்பு கணக்கினை எடுத்துக் கொள்வோம். பெரிய பலம் அதிமுக. கடந்த தேர்தலில் 4.5 லட்சம் ஓட்டுகள் பெற்று ரெண்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கட்சி. அந்தப் பகுதியில் பாஜகவுக்கு கணிசமான ஓட்டுகள் இருக்கின்றன. அதற்குச் சமமாக வன்னியர்கள் ஓட்டுகள் இருப்பதால் பாமகவின் பலமும் இருக்கிறது. முக்கியமான இன்னொரு விசயம். எடப்பாடி என்ற ஊர். ஈரோடு தொகுதி குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ தூரம் தான். கௌரவப் பிரச்சினையாகி விடும்.

வைகோவுக்கு ஈரோடு வழியா அல்லது வலியா?

இப்ப வைகோவின் நிலைமை இன்னும் மோசம்! வேணாம்னு சொல்லிட்டு கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மதிமுகவில் மொத்தமே பதினைந்து பேர்கள் தான் இருக்கிறார்கள் என்ற உண்மை உலகிற்குத் தெரிந்துவிடும். சரின்னு வாங்கிக்கிட்டு போட்டி போட்டால் அசிங்கப்பட்டுத் தோற்பது உறுதியாகிவிடும்.

இருந்தாலும் இன்றைய நிலையில் வைகோ அரசியல் அநாதையாக நடுத்தெருவில் நிற்பதைவிட ஈரோடு தொகுதியை வாங்கிக் கொண்டு, அதற்கும் ஏதாவது இரண்டு, மூன்று பெருமைமிகு காரணங்களைச் சொல்லிக் கொண்டு போட்டியிடலாம். 

மற்றபடி, பகுத்தறிவு மண் என்பதனால் ஓட்டெல்லாம் கிடையாது. ஈரோடு ஈவேரா மண்ணுனு சொன்னா, காவிரி மேட்டூர் நோக்கி ஓட ஆரம்பிச்சுடும். அவ்வளவு வீக்கு. ஈரோடு பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளைப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு விசயங்களை நீங்கள் தவறாமல் பார்ப்பீர்கள். 

ஒன்று வீட்டு வாசலில் சாணம் கரைத்து மெழுகியிருப்பார்கள். (இப்பொழுது கெமிக்கல் கலந்த சாணப்பவுடர் கலந்து மெழுகுகிறார்கள்) இன்னொன்று எல்லா வீடுகளிலும் ஒரு சின்ன பூஜை அறை இருக்கும் (குடிசை மற்றும் அதுபோன்ற வீடுகள் தவிர்த்து) 
இந்த இரண்டும் அந்த பெல்ட்டைத் தவிர வேறெங்கேயும் அவ்வளவு நிறைய பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஈவேரா மண்ணுனு நிரூபணம் ஆக்கியிருக்காங்க.

வைகோவுக்கு ஈரோடு வழியா அல்லது வலியா?

மதிமுகவுக்கு மற்றொரு பெரிய பலவீனம் வைகோவின் சமீபத்திய பல்டியும் மற்றும் ஸ்டாலினிடம் மண்டியிட்ட விதமும். அதனை மதிமுக தொண்டர்களும் ரசிக்கவில்லை. திமுக தொண்டர்களும் மதிக்கவில்லை. வேறு போக்கிடம் இல்லாமல் உள்ளே வந்த வைகோவின் நிலைமை தாலியறுத்த மகள் வீட்டில் கடைசி காலத்தைக் கழிக்கும் சம்பந்தியின் நிலை தான். உசுரைக் காப்பாத்திக்க ஒரு வாய் சோறு வேணும். அதற்காக எதையும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை.

தேர்தலில் தோற்றாலும் வைகோவைப் பொறுத்தவரை பெரிய சங்கடமெல்லாம் இல்லை. வைகோவின் வரலாற்றில் இதுவொரு சிறு சறுக்கல் தான். இப்படித்தான் ஜார் மன்னர்கள் காலத்தில், செக்கெஸ்லோவேகியா ஓரத்தில், கிரேக்க கிரகத்தில்னு அந்தக் கருப்புத் துண்டை பொறுப்பாக இழுத்து இழுத்து விட்டு மானத்தை மறைத்துக் கொள்ளத் தெரிந்தவர் தான். 

எனவே ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் சார்பாக யார் நின்றாலும் அதிமுகவுக்குதான் முதல் வெற்றி என்பது உறுதியாகிவிட்டது... 

கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் எழுத்தாளரின் தனிப்பட்ட அரசியல் பார்வை மட்டுமே!

newstm

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP