ஏழைகளின் ”கோவா”வா? அது எங்க இருக்கு..?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் அருகில் உள்ளது மணப்பாடு. கோடை வெயிலை சமாளிக உகந்த இடம் என்றால் அது மணப்பாடு சுற்றுலாத்தலங்கள் தான்.
 | 

ஏழைகளின் ”கோவா”வா? அது எங்க இருக்கு..?

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் அருகில் உள்ளது மணப்பாடு. இது ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதுமட்டும்மல்ல போர்த்துக்கீசிய கட்டிய கலையுடன் கூடிய பிரமாண்ட வீடுகள், சர்ச்சுகள் என அமைந்திருக்கும் இந்த பெரிய கிராமம், மூன்றுபுறமும், கடலால் சூழப்பட்டு ஒரு தீவு போல காட்சியளிக்கிறது.  

மணப்பாட்டில் கடலோரம் அமைந்துள்ள தேவாலயத்தில் இருந்தபடி பார்த்தால் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். இந்த அழகை பார்த்துதான் மணப்பாட்டில் பல தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 'இயற்கை' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பாடல், நீர் பறவை, மணிரத்தினத்தின் கடல், ஜீவா, நீதானே என் பொன்வசந்தம், போன்ற மைல் கல் பதித்த பல திரைப்படங்கள் மணப்பாட்டில் படமாக்கப்பட்டவை ஆகும்.

மணப்பாடு ஏழைகளின் கோவா என்று அழைக்கப்படுகிறது. இயற்கையிலேயே அழகு நிறைந்த மணப்பாடு கடல் ஒருபுறம் அமைதியாகவும், மற்றொரு புறம் ஆர்ப்பரிக்கும் அலைகளுடன் காணப்படும். மணப்பாடு கடற்கரையில் கடல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்த சிறப்பான இடமாக தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் ஐந்து கடல்சார் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.  

ஏழைகளின் ”கோவா”வா? அது எங்க இருக்கு..?

உலகிலேயே மணப்பாட்டில் மட்டும்தான் ஒரே நேரத்தில் பாய் படகு ஓட்டம், அலைச்சறுக்கு ஓட்டம், காத்தாடி இணைந்த அலைச்சறுக்கு ஓட்டம், குறும்படகு ஓட்டம், நின்றபடி துழாவல் ஓட்டம் ஆகிய 5 விதமான கடல் சாகச போட்டிகளை நடத்த முடியும் என கூறப்படுகிறது. இங்கு மணப்பாடு கடல் பகுதியில் கடல் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள், கடல்சார் சாகச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று மணப்பாடு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டது என கூறப்படுகிறது. மணப்பாடு இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை கிராமம் . இங்கு நீண்ட நெடிய கடற்கரை அமைந்து உள்ளது. அதில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் தென்புறம் கடல் அலைகள் சீற்றம் அதிகமாகவும், வடபுறம் கடல் அலைகள் குறைந்து அமைதியாகவும் காணப்படுகிறது.  

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேவாலயத்தின் கட்டிட கலையின் சிறப்புகளை பார்த்து ரசிக்கின்றனர். ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சில வெளிநாட்டுப் பறவைகள் மணப்பாடு கடற்கரைக்கு வந்து செல்வதுண்டு. சுற்றுலா பயணிகள் அனைவரும் குளித்து மகிழ்வதற்க்கு ஏற்றார் போல் அங்கு மணல் திட்டுகள் உள்ளன. கடற்கரையில் மணல்திட்டால் உருவான குட்டையில் தேங்கி உள்ள கடல் நீரில் குழந்தைகள் தைரியமாக குளியல் போடுகின்றனர். இப்பகுதியானது அலைசறுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு உகந்த இடம் என்பதால், ஆண்டுதோறும் இங்கு தேசிய அலைசறுக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. 

ஏழைகளின் ”கோவா”வா? அது எங்க இருக்கு..?

மணப்பாடு சுற்றுலா தலங்கள் கோடைவிடுமுறைக்கு உகந்த இடமாக உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர். மேலும் கோடை வெயிலை சமாளிப்பதற்காக, உள்ளூர் சுற்றுலா பயணிகள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏராளமானவர்கள் மணப்பாட்டுக்கு வந்து செல்கின்றனர்.  பின்னர், மணல்குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம், புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், கலங்கரை விளக்கு போன்றவற்றுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்கின்றனர். கோடை வெயிலை சமாளிக உகந்த இடம் என்றால் அது மணப்பாடு சுற்றுலாத்தலங்கள் தான்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP