24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது!

24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது!
 | 

24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது!

24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது!

சரித்திர காலத்தில் இருந்தே துாங்கா நகரம் என்று பெயர் பெற்றது மதுரை. திருச்சியில் கூட டவுன் பஸ்கள் இயக்கம் விடிய விடிய நடக்கிறது. திருச்செங்கோடு போன்ற இடங்களில் நெசவு தொழில் 24 மணி நேரமும் நடக்கிறது. இப்படி தமிழகத்தின் பல நகரங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணி நேரத்தை கடைபிடித்து வருகின்றன. தேவைக்கு ஏற்ப பணி நேரங்கள் அமைத்துக் கொள்வதால் அந்த அந்த ஊர்களில் மக்கள் வாழ்வியலும் அதற்கு தகுந்தார் போல மாறிவிடுகிறது. 

பாரம்பரியமாக இது போல செயல்படும் போது, பஸ் வசதி, காவல்துறையின் இரவு ரோந்து போன்ற அடிப்படை தேவைகளில் இருந்தும் அனைத்தும் பூர்த்தியாகிவிடுகின்றன.

தற்போது மத்திய அரசு வேலைவாய்ப்பு உட்பட அனைத்தையும் இருமடங்காக அதிகரிக்க அனைத்து நாளிலும், 24 மணி நேரமும் கடைகள் திறந்து வைக்கலாம் என்று உத்தரவு போட்டு இருக்கிறது. உண்மையில் இது வரவேற்க வேண்டிய சட்டம். கால் சென்டர் போன்றவை ஏற்கனவே இரவு நேரங்களில் இயங்கி வருகின்றன. அதே கால் சென்டர்கள் கற்றுக் கொடுக்கும் இன்னொரு நடவடிக்கையும் இருக்கிறது. 

அவை தனது ஊழியர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்று விடுவதற்கு வாகனங்கள் ஏற்பாடு செய்கின்றன. இதன் காரணமாக அங்கு பணியாற்றுபவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வேறு நிறுவனங்களின் வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் ஒரு சில அசம்பாவீதங்கள் தவிர்த்து மற்றபடி அவற்றி்ல இரவு நேரங்களில் வேலை செய்வது பாதுகாப்பாகவே இருக்கிறது.

சென்னையில் பிரபல நிறுவனங்கள் ஓட்டல்களையும் சேர்த்தே நடத்துகின்றன. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், எங்கள் வாடிக்கையாளர்கள் அனைத்து பொருட்களையும் இங்கே வாங்கி விட முடியும். அதற்கு பிறகு அவர்கள் சாப்பிடவதற்கு மட்டுமே ஓட்டல்களை தேடி செல்ல வேண்டும். எங்களிடம் வாங்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டலில் சென்று சாப்பிடுவது அவ்வளவு பாதுகாப்பானதாக இருப்பதில்லை. பொருட்கள் தொலைந்துவிடவும் வாய்ப்பு உள்ளது. 

நாங்களே ஓட்டல் நடத்தும் போது வாடிக்கையாளர்கள் பொருட்களுக்கு பில் போட்டு விட்டு இங்கே சாப்பிட்டு விட்டு அதன் பிறகு பொருட்களை வாங்கி கொண்டு நேராக வீட்டிற்கு செல்ல முடியும். அதனால் தான் ஓட்டலையும் நாங்களே நடத்துகிறோம் என்கிறார்கள்.

திருச்செங்கோடு, கரூர், கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் தற்போது இரவு ஷிப்ட் நடைபெறுகிறது. அதில் பெண்களும்.வேலை செய்கிறார்கள். அவர்கள் சுமார் 7 அல்லது 8 மணிக்கு வேலைக்கு வந்துவிடும் அவர்கள் மறுநாள் அதிகாலையில் வீடு திரும்புகிறார்கள். இதனால் தொந்தரவு எதுவும் இருப்பதில்லை.

இது போன்ற அனைத்து சம்பவங்களும் எடுத்துக்காட்டுவது பாதுகாப்பு. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இது போன்ற பாதுகாப்பு இப்போது இல்லை. மேலும் பல ஊர்களுக்கு இரவு 10 மணிக்கு மேலும் பஸ்கள் கிடையாது. பல ஊர்களில் இரவு பேருந்து வசதி என்பது ஊர்களுக்குள்ளாகவே இல்லை. இந்த சூழ்நிலைகளை எல்லாம் ஆய்வு செய்து அவற்றை போதுமான அளவில் பூர்த்தி செய்த பிறகு 24 மணி நேரம் கடை திறப்பது நல்லது.

போக்குவரத்து நிறுவனங்களில் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓய்வு அறை இருப்பதைப் போல பெரிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறைகள் ஏற்படுத்தலாம். சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவோர் தங்கும் வகையில் உள்ளாட்சி நிர்வாகங்களே திருப்பதி போன்ற தலங்களில் தங்கும் இடம் ஏற்பாடு செய்வது போல ஓய்வு அறைகள் உருவாக்கினால் நல்ல பலன் கொடுக்கும்.

காவல்துறையும் இரவு நேர .ரோந்து எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும். அதற்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது அவசியம். இரவில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை செய்து முடித்து விட்டு 24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதித்தால் தான் அது எதிர்பாக்கும் பலன்களைத் தரும். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP