ஸ்டாலின் விளம்பரம் தேட அவசியமில்லை: கனிமொழி

தமிழக மக்கள் அனைவரும் அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரம் தேட அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
 | 

ஸ்டாலின் விளம்பரம் தேட அவசியமில்லை: கனிமொழி

தமிழக மக்கள் அனைவரும் அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரம் தேட அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.  

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, தமிழக மக்கள் அனைவரால் அறியபெற்ற திமுக தலைவரான ஸ்டாலின் விளம்பர தேட வேண்டிய  அவசியமில்லை என கூறினார். நீலகிரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஏன் பார்வையிடவில்லை? அவரை யார் தடுத்தது? என கேள்வி எழுப்பினார். 

மேலும், கஜா புயலுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற திமுக போராடி வருவதாகவும், பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக, மத்திய அரசிடம் போதிய நிதியை கேட்டு பெற வேண்டும் எனவும் கூறினார். 

ப.சிதம்பரம் குறித்து முதலமைச்சர் பேசியது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, " முதலமைச்சரின் கீழ்தரமான பேச்சுக்கு பதில் கூற முடியாது என்றார். காஷ்மீர் விவகாரத்தை ஆதரித்து பேசுவோர் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து பேச வேண்டும் என கனிமொழி தெரிவித்தார். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP