ஸ்டாலின் ஒரு உழைப்பாளி; ஆளுமை மிக்க தலைவர் - தங்கத்தமிழ்ச் செல்வன் புகழாரம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலர் தங்கத் தமிழ்ச்செல்வன் இன்று சென்னை அண்ணா அறிவாயாலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
 | 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறந்த ஆளுமை மிக்க தலைவர். அவரால் மட்டுமே தமிழகத்தில் மக்களுக்கு தேவையான திட்டங்களை  கொண்டு வர முடியும். கலைஞர், புரட்சித் தலைவர் இடையே சண்டை இருந்தது அனைவருக்கும் தெரியும். அதுபோல அரசியலில் கருத்து முரண்பாடுகள் இருக்கும். 

ஸ்டாலின் அனைத்து தரப்பினரையும் அனுசரித்து போகிறார். அவர் உழைப்பதை மதிக்க வேண்டும். அதிமுகவில் இருந்து பலர் திமுகவிற்கு வந்துள்ளனர். 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு' என்ற அண்ணாவின் கொள்கையை கடைபிடிப்பவர் ஸ்டாலின். 

ஸ்டாலின் ஒரு உழைப்பாளி; ஆளுமை மிக்க தலைவர் - தங்கத்தமிழ்ச் செல்வன் புகழாரம்!

ஒற்றைத்தலைமையில் உள்ள கட்சி தான் சிறப்பாக செயல்பட முடியும். அதிமுகவை பாஜக இயக்குகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. தன்மானத்தினை இழந்து நான் அதிமுகவில் இணைய விரும்பவில்லை. 

ஸ்டாலின் ஒரு உழைப்பாளி; கலைஞர் மறைந்த அன்றைய தினம் உயர் நீதிமன்றம் சென்று, கலைஞருக்கு மெரினாவில் இடம் வாங்கினார். ஆர்.கே கே. நகர் தேர்தலில் தோற்றாலும் கூட அனைவரையும் ஒன்றிணைத்து உழைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.  

கட்சியின் பதவிக்காக சேரவில்லை. பதவியை நாம் கேட்கக் கூடாது. நமது உழைப்பை பார்த்து தலைமை, பதவி கொடுக்க வேண்டும். எனது உழைப்பை பார்த்து தலைமை பதவி கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் நேர்மையான ஆட்சி நடைபெறும் என்று நம்பிக்கை இருக்கிறது. திமுக தொடர்ந்து பயணிக்கும்; 

ஸ்டாலின் ஒரு உழைப்பாளி; ஆளுமை மிக்க தலைவர் - தங்கத்தமிழ்ச் செல்வன் புகழாரம்!

மேலும், அமமுக குறித்து இதன்பின்னர் பேசவிரும்பவில்லை. ஒரு கட்சியில் இருந்து வந்தபிறகு அந்த கட்சி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. 

நான் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, எனது ஆதரவாளர்கள் சிலரும் என்னுடன் திமுகவில் இணைய முன்வந்தனர். ஆனால், தேனியில் மிகப்பெரிய மாநாடு நடத்தப்படும். அதில் அவர்கள் எல்லாம் திமுகவில் இணைவார்கள்" என்று தெரிவித்தார். 

திமுகவில் இணைந்தார் தங்கத் தமிழ்ச்செல்வன்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP