இந்து ஓட்டு வங்கியை  உருவாக்கிய ஸ்டாலின், ராஜேந்திர பாலாஜி!

ஒரு அறைக்குள் ஒரு சிலர் மத்தியில் நடந்த விவாதம், திட்டமிட்ட ரீதியில் பரபரப்ப பட்டது. ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினருக்கு எதிரியாக உருவகப்படுத்தப்பட்டார். சமூக ஊடங்களில் இது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம், விஜயகாந்த் இல்லாத குறையை ராஜேந்திர பாலாஜியை கொண்டு நிரப்பிவிடலாம் என்று பலர் நினைத்தது தான்.
 | 

இந்து ஓட்டு வங்கியை  உருவாக்கிய ஸ்டாலின், ராஜேந்திர பாலாஜி!

கன்னியாகுமரி மாவட்டத்தை, கன்னிமேரி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோஷம் அடைக்கப்பட்டு, சர்ச் கட்டும் முயற்சியை முறியடித்த பின்னர் தான் விவேகானந்தர் பாறை உருவாக்கப்பட்டது போன்றவை எல்லாம் கடந்த கால வரலாற்று நிகழ்வுகள். 

அந்த மாவட்டத்தை பொறுத்தளவில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் இரு பிரிவாகதான் இருக்கிறார்கள். இது கன்னியாகுமரி, திருநெல்வேலி என்று பெரும்பாலான மாவட்டங்கள் நிலை இது தான். ஆனால் வெளிமாவட்டங்களில் இந்த உண்மை தெரியாது. அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தான் இந்த உணர்வு தெரியும்.

இதை உணராத ஸ்டாலினும், இதை உணர்ந்தோ உணராமலோ பேசிய ராஜேந்திர பாலாஜியும் இணைந்து தான் நாங்குநேரியில் அதிமுகவை வெற்றி பெற செய்துள்ளனர்.

தேர்தல்களில், உள்ளூர் பிரமுகர்களை அழைத்து வந்து  பொதுத் தேவைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தோ, அல்லது அதற்கு தேவையான பணம் கொடுத்தோ, ஓட்டுக்களை தங்கள் பக்கம் திருப்புவது ஒரு நிலைப்பாடு. 

பெரும்பாலும் கோயில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கலையரங்கள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வெயிட்டாகத்தான் இருக்கும். இதைப் போன்ற சூழ்நிலை நாங்குநேரி தொகுதியிலும் ஏற்பட்டது. அங்கு இடைத் தேர்தல் பொறுப்பாளராக இருந்த ராஜேந்திர பாலாஜியை அதிமுகவினர் அழைப்பின் பேரில் சில முஸ்லீம் ஜமாத்தார்கள் சந்தித்து தங்கள் ஊருக்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையுடன் வந்திருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்று தெரிந்ததும், தன் இயல்பான அடிப்படையில் நீங்கள் தான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்களே, மோடியுன் கூட்டணி வைத்திருப்பதால் அவரே தமிழகத்தை ஆள்வதாக பிரச்சாரம் செய்கிறீர்கள். 

ஆனால் இங்கு பழனிசாமிதான் ஆட்சி செய்கிறார். அதனால் நீங்கள் கோரிக்கை மனுவை கொண்டு போய் திமுக எம்பியிடம் கொடுங்கள்.. நீங்களும் ஓட்டுப்போட மாட்டீர்கள், கிறஸ்தவர்களும் பாதிரியார் சொன்னால் தான் ஓட்டுப் போடுவார்கள் என பொங்கி விட்டார்.

ஒரு அறைக்குள் ஒரு சிலர் மத்தியில் நடந்த விவாதம், திட்டமிட்ட ரீதியில் பரபரப்ப பட்டது. ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினருக்கு எதிரியாக உருவகப்படுத்தப்பட்டார். சமூக ஊடங்களில் இது பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம், விஜயகாந்த் இல்லாத குறையை ராஜேந்திர பாலாஜியை கொண்டு நிரப்பிவிடலாம் என்று பலர் நினைத்தது தான்.

ஆனால் இந்துக்கள் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்னொரு புறம் ஸ்டாலின், நடப்பது இடைத் தேர்தல் என்பதை புரிந்து கொள்ளலாமல், மாநில அரசின் குறைகளை எடுத்து சொல்வதைக் காட்டிலும், மோடிக்கு எதிரான கருத்துகளை முன்வைத்து, சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக தன்னை காட்டிக் கொண்டார். 

மேலும் தமிழக அரசை மோடியின் பினாமி அரசு என்றும், எடப்பாடி, பன்னீர் செல்வம் போன்றவர்களை மோடியின் ஜால்ராக்கள் என்றும் விமர்சனம் செய்தனர். அவர் மகன் உதயநிதியும், எடப்பாடி ஆட்சியை டெட்பாடி ஆட்சி என்றும், மோடி எடுபிடி ஆட்சி என்றும் விமர்சனம் செய்து, மோடிக்கு எதிராக ஓட்டுகளை திரட்டுவதாக நினைத்து கொண்டு அதிமுகவிற்கு ஆதரவு ஓட்டுகளை திரட்டினர்.

பாஜக தலைவர்களின் கருத்துக்களை விட, ராஜேந்திர பாலாஜி கூறுயதையும், ஸ்டாலின், உதய நிதி பேச்சுகளையும் மக்கள் கேட்டு ஒற்றுமையாக அதிமுகவிற்கு வாக்களித்தனர். அதனால் தான் அதிமுக இத்தனை அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால், இந்த வெற்றிக்கு ஸ்டாலினும், ராஜேந்திர பாலாஜியும் தான் காரணம் எனலாம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP