திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மீண்டும் சீட் வாங்கு முயற்சியில் இருக்கிறார் தி.மு.க-வை சேர்ந்த டாக்டர் சரவணன்.
 | 

திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மீண்டும் சீட் வாங்கு முயற்சியில் இருக்கிறார் தி.மு.க-வை சேர்ந்த டாக்டர் சரவணன்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் வெற்றிக்கனியை சுவைத்துவிட வேண்டும் என முக்கிய கட்சிகள் கட்சிகள் கோதாவில் இறங்க தயாராகி வருகின்றன. இந்த முறையும் இரு தொகுதிகளிலும் டி.டி.வி.தினகரனுக்கும் ஆளும் அ.தி.மு.க.வுக்கும் இடையே போட்டி அதிகமாக இருக்கும் என்றும் தி.மு.க மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் என்றே கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.கவின் கோடையாகக் கருதப்படுகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்!

இதுவரை அங்கு நடந்த 10 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க-வுடன் கூட்டணி போட்டதால் தே.மு.தி.க வென்றது. 7 முறை அ.தி.மு.கவே வென்றுள்ளது. முக்குலத்தோர் வாக்குகள் அதிகம். இதனால்தான் கடந்த முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே சாதியைச் சேர்ந்த டாக்டர் சரவணன் தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டார். ஆனால், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தோல்வியைத் தழுவினார். முக்குலத்தோர் வாக்குகளை இந்த முறை அ.தி.மு.க-வும், அமமுகவும் பிரித்துக் கொள்ளும் என்பதால் தி.மு.க மூன்றாமிடத்திற்குத் தள்ளப்படும் என்பதால் மு.க.ஸ்டாலின் சற்று கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், இந்த முறையும் இடைத்தேர்தலில் மீண்டும் டாக்டர் சரவணன் போட்டியிட வாய்ப்புக் கேட்டு வருகிறார். 

திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்!

இதனால், தலைமையை குளிர வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் அவர். சமீபத்தில் 'கலைஞருக்கு கவிதாஞ்சலி, தலைவருக்கு வாழ்த்தொலி' என நிகழ்ச்சியை நடத்தினார். இந்த விழாவில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த, 140 கவிஞர்கள் பங்கேற்று, கவிதை வாசித்தார்கள். இதைப் புத்தகமாக அச்சிட்டு, ஸ்டாலினிடம் வழங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க-வுக்கு திண்டாட்டம்... கலக்கத்தில் ஸ்டாலின்!

டாக்டர் சரவணன் ஸ்டாலினை குளிர வைக்காமல் இருந்தாலும் அவருக்கே மீண்டும் சீட் தருவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காரணம், முக்குலத்து வாக்குவங்கி, மற்றொன்று பணம் பெருத்தவர் என்கிற காரணத்தால் டாக்டர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்படுவது உறுதி எனக் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP