மு.க.ஸ்டாலின் குடும்ப அரசியல்... விரக்தியில் ரஜினி!

மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்க்காவிட்டாலும் அவரது குடும்பத்தினர் நடத்தும் அரசியலால் விரக்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 | 

மு.க.ஸ்டாலின் குடும்ப அரசியல்... விரக்தியில் ரஜினி!

திமுகவுக்கும், ரஜினிக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு தெரிந்ததுதான். முரசொலியில் ரஜினியை பற்றி வந்த சமயத்தில் ரொம்பவே கோபத்தில்தான் இருந்தாராம் ரஜினி. தொடர்ந்து முரசொலியில் ரஜினி தொடர்பான செய்திக்கு மறுப்பும் விளக்கமும் வந்ததைப் பார்த்து சமாதானம் ஆகியிருக்கிறார் ரஜினி.
‘நான் தான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க.? இதெல்லாம் யாரு பண்றது? ஸ்டாலினுக்கு தெரிஞ்சு நடக்குதா... தெரியாமல் நடக்குதா?’ என விசாரித்திருக்கிறார்.
அதற்கு, ‘ஸ்டாலினுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களது குடும்பத்தில் இருப்பவர்கள் சிலருக்கு தெரிந்துதான் எல்லாம் நடக்கிறது’ என சொன்னார்களாம் விவரமறிந்தவர்கள். ‘ஸ்டாலின் விரும்பினாலும் அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க நான் அரசியல் பக்கமே வரக்கூடாதுன்னு நினைக்கிறாங்களா?’ என்று கேட்டு சிரித்தாராம் ரஜினி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP