நடிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியாது: ரோஜா ஆவேசம்

மக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
 | 

நடிகன் நினைத்தால் எதையும் மாற்ற முடியாது: ரோஜா ஆவேசம்

மக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை ரோஜா, நடிகர்கள் ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள் யாருக்கு வாக்கு அளிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என பதிலளித்தார். மேலும், மக்களை நேரடியாக சந்திக்காமல் யாராலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எனக்கு மக்கள் எளிதில் வாக்கு அளித்துவிடுவார்கள் என ஒரு நடிகன் நினைத்தால் அது நடக்காது எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவராக முதலமைச்சர் பழனிசாமி மாறியிருக்கிறார் என தெரிவித்த அவர்,  தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என ரஜினி ஏன் கூறினார் என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP