தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா?

மக்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பெயர் இடம்பெறவில்லை.
 | 

தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா?

மக்களவைத் தேர்தலுக்கான, மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அக்கட்சியின் தலைவரான கமல் ஹாசனின் பெயர் இடம்பெறவில்லை. 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வெளியான‌ இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், இத்தேர்தலில் போட்டியிடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கமல் ஹாசனின் பெயர் இடம்பெறவில்லை. திருச்சி அல்லது ராமநாதபுரத்தில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று கமல் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், சிவகங்கை தொகுதியில் பாடலாசிரியர் சிநேகனும், கோவை தொகுதியில் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP