’நானே முதல்வர்... ‘எடப்பாடிக்கு ஆட்டம் காட்டும் எம்.எல்.ஏ... பின்னணியில் டி.டி.வி!?

எடப்பாடி அணியில் இருக்கும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறப்போவதாக ஆட்டம் காட்டி வருவதால் ஆளும் தரப்பு கலக்கமடைந்து வருகிறது.
 | 

’நானே முதல்வர்... ‘எடப்பாடிக்கு ஆட்டம் காட்டும் எம்.எல்.ஏ... பின்னணியில் டி.டி.வி!?

எடப்பாடி அணியில் இருக்கும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.வான சிவசுப்ரமணி, டி.டி.வி.தினகரன் அணிக்கு மாறப்போவதாக ஆட்டம் காட்டி வருவதால் ஆளும் தரப்பு கலக்கமடைந்து வருகிறது.   

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சிவசுப்பிரமணி. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ள இவர், ஆட்சிக்கு வந்த புதிதில் டாஸ்மாக் பார் மூலமாக வந்த வருமானத்தை கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு பிரித்துக் கொடுத்தார். இதனால் தொகுதிக்குள் கட்சி நிகழ்ச்சிகளை நடத்த ஆர்வத்துடன் கட்சி நிர்வாகிகள் முன்வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு பைசாகூட கொடுப்பதில்லையாம்.

’நானே முதல்வர்... ‘எடப்பாடிக்கு ஆட்டம் காட்டும் எம்.எல்.ஏ... பின்னணியில் டி.டி.வி!?

சிபாரிசுக்கு கட்சிக்காரர்கள் வந்தால் அதிலும் சில்லரை பார்ப்பதாக குற்றச்சாட்டும் இருக்கிறது. இதுபற்றி கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பினால், ‘மொடக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை நானே முதல்வர், நானே அமைச்சர். என்னை கேட்காமல் ஒரு துரும்புகூட அசையாது’ என்று அதிர வைக்கிறாராம். டி.டி.வி. தினகரனிடமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் புகார் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது டி.டி.வி.தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் சந்தித்து பேசிய தகவலும் வெளியானது.

’நானே முதல்வர்... ‘எடப்பாடிக்கு ஆட்டம் காட்டும் எம்.எல்.ஏ... பின்னணியில் டி.டி.வி!?

அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு டி.டி.வி.தினகரனிடம் ஒட்டிக்கொண்டு மீண்டும் மொடக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவேன் என சவால் விடுவதாகக் கூறுகிறார்கள். தற்போது பல வழிகளில் வருவாய் கொட்டுவதால் வெள்ளோடு பகுதியில் ஒரு திருமண மண்டபத்தை விலைக்கு வாங்கியுள்ளார். தாளவாடி மலைப்பகுதியில் சில நூறு ஏக்கர் நிலத்தை சுவாகா செய்துள்ளார். இப்பகுதியில் நீச்சல்குளத்துடன் சொகுசு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களாவுக்கு அடிக்கடி சென்று, ரிலாக்ஸ் செய்துகொள்கிறார் என அடுக்கடுக்காக புகார் வந்து கொண்கிருப்பதாகக் கூறுகிறார்கள்.

 ’நானே முதல்வர்... ‘எடப்பாடிக்கு ஆட்டம் காட்டும் எம்.எல்.ஏ... பின்னணியில் டி.டி.வி!?

 இவரது ஆட்டம் தாங்காமல் உள்ளூர் அதிமுகவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸிடமும் முறையிட்டுள்ளனர். அடுத்த தேர்தலில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டால் நாமே இவரை தோற்கடிக்க வேண்டும் என அதிமுக தொண்டர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.  
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP