Logo

நீங்களும் இப்போ இன்ஸ்டாகிராம் வெரிஃபைட் கணக்கு பெறலாம்!

ஒருவரது கணக்கை வெரிஃபைட் ஆக்கவேண்டுமானால், அதற்கு விண்ணப்பிக்கலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஆப்பில் ஐ-போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
 | 

நீங்களும் இப்போ இன்ஸ்டாகிராம் வெரிஃபைட் கணக்கு பெறலாம்!

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எல்லா  சமூக வலைதளங்களில்  கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இதற்காகவே விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்வர்.

சில பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மட்டுமே  வெரிஃபைட் ஆக இருக்கும். அதாவது, அவர்களது கணக்கு போலியானது அல்ல, உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக வெரிஃபைட் சின்னம் கொடுக்கப்படும்.

மேலும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவர்களது பக்கம் தானாகவே வெரிஃபைட் ஆகிவிடும். ஆனால், இப்போ  ஒருவரது கணக்கை  வெரிஃபைட் ஆக்கவேண்டுமானால், அதற்கு விண்ணப்பிக்கலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது ஆப்பில் ஐ-போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.

இன்ஸ்டாகிராம்  கணக்கை  வெரிஃபைட் கணக்காக மாற்றுவதற்கு அவர்கள் கேட்கும் சில அதிகாரப்பூர்வ தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும். அதனை சரிபார்த்துவிட்டு   வெரிஃபைட் சின்னம் கொடுக்கவேண்டுமா இல்லையா என்பதை இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவுசெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு முறை அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டால் 30 நாட்களுக்கு அடுத்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை  வெரிஃபைட் ஆக மாற்ற நீங்கள் செய்யவேண்டியவை:
Settings சென்று Request Verification-ஐ தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்கள் கேட்கும் அடையாள அட்டை முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதே வசதி விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு அறிமுகபடுத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP