கணவரை பிரிந்து வந்த பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்!

கணவரை பிரிந்து வந்த பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்.. வேறொரு நபருடன் தொடர்பு என புகார்
 | 

கணவரை பிரிந்து வந்த பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கணவரை பிரிந்து ஆண் நண்பருடன் வசித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறி கொலை செய்த தொலைக்காட்சி நிருபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாகபட்டினம் 22வது வார்டு தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் ரெட்டி தேவி (35). கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் ரெட்டி தேவி. இவருக்கு அந்த பகுதியில் தொலைக்காட்சி நிருபராக பணியாற்றி வந்த முரளி என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள கங்காதர் தியேட்டர் பகுதியில் அவரது சடலம்  கிடந்துள்ளது.

கணவரை பிரிந்து வந்த பெண்ணை அடித்துக்கொன்ற கள்ளக்காதலன்!

இதனையறிந்து அங்கு  சென்று உடலை மீட்ட காவல்துறையினர் அவருடன் ஒன்றாக வசித்து வந்த தொலைக்காட்சி நிருபர் முரளியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்தான் கொலைகாரன் என்ற விஷயம் வெளிப்படவே விசாரணையை தீவிரப்படுத்தினர். ரெட்டி தேவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக முரளிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரெட்டி தேவிக்கும் முரளிக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. சம்பவத்தன்று சண்ட வந்தப்போது ரெட்டி தேவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க போன் செய்துள்ளார். இதனை தடுத்த முரளி, அங்கு கிழே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தேவியின் தலையில் அடித்துள்ளார். இதில் ரெட்டி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரெட்டி தேவி இறந்ததும் முரளி அங்கிருந்து தப்பிவிட்டார். இருவருக்கும் இடையே நடந்த சண்டை அடிப்படையில் விசாரித்தபோது கொலை செய்ததை முரளி ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP