வேறொரு ஆணுடன் பேசிய பெண்.. கோபத்தில் அறைந்ததால் மரணம்!

கோபத்தில் அவசரப்பட்டு செய்யும் செயல் பலரது உயிரையே எடுத்து விடுகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதைப் போல ஆத்திரத்தில் செய்த காரியம் இளம் பெண் ஒருவரின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது
 | 

வேறொரு ஆணுடன் பேசிய பெண்.. கோபத்தில் அறைந்ததால் மரணம்!

கோபத்தில் அவசரப்பட்டு செய்யும் செயல் பலரது உயிரையே எடுத்து விடுகிறது. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதைப் போல ஆத்திரத்தில் செய்த காரியம் இளம் பெண் ஒருவரின் உயிரைக்  காவு வாங்கியிருக்கிறது.
மும்பையில் தனது தோழி ஒருவர் வேறொரு ஆணுடன் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்த நண்பர் அவரை அறைந்ததில் அந்த பெண் மரணமடைந்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் சீதா பிரதான் எனும் 35 வயது பெண் மன்குர்ட் ரயில்வே நிலையத்துக்கு அருகில் தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதை அவரது மற்றொரு ஆண் நண்பரான ராஜு புஜாரி எல்லப்பா என்பவர் பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் சீதாவிடம் கோபமாக பேசி நடு ரோட்டில் அறைந்துள்ளார். அப்போது சீதா மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்க செல்லும் வழியில் அவர் உயிர் இழந்துள்ளார். இதையடுத்து சீதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ராஜு  காவல் நிலையத்தில் உள்ளார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP