Logo

தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பணையில் இருவர் கைது!!

தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் கோவையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு, அதில் சம்பந்தபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பணையில் இருவர் கைது!!

தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் கோவையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டதோடு, அதில் சம்பந்தபட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகரை, பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை குழுவினர் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர் .

இதை தொடர்ந்து, கடந்த மாதம் மட்டும் நடைபெற்ற ரோந்து பணிகளின் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , சுமார் ஒரு கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று, வெரட்டி ஹால் காவல் நிலையத்திற்கு, அரசு தடை செய்யப்பட்ட பான் மசாலா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சுமார் 30 லட்சம்  மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பிரமோத்குமார் (37)  மற்றும் வினோத்குமார் (28) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP