இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!
 | 

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!

2020 புதுவருடத்தை கோலாகலமாக வரவேற்க சென்னையில் இன்று மதியம் முதலே கொண்டாட்டங்களும், கேளிக்கைகளும் களைக்கட்ட துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று மாலை முதலே.. குறிப்பாக பல்வேறு இடங்களில் இன்று இரவு முதல் சென்னை பெருநகர காவல்துறையினர் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளனர்.

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020 புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மெரீனா கடற்கரை உட்புறச்சாலையில் அனைத்து வழிகளையும் இன்று இரவு 8 மணி முதல் முழுவதுமாக அடைக்கப்பட்டு, வாகனங்கள் நுழைவது முற்றிலுமாக தடைசெய்யப்படும். 8 மணிக்கு முன்னரே சென்று கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகா், பாரதிசாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தாசாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்படும்.

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!

ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா முனை சந்திப்பிலிருந்து போர்நினைவு சின்னம் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் இன்று இரவு 8 மணி முதல் என்.எஸ்.சி.போஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்படும். அடையாறில் இருந்து வாகனங்கள் கச்சேரி சாலை,சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பு,கச்சேரி சாலை,லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும். 

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்துச் சாலை, போர் நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜா் சாலைக்கு இன்று இரவு 8 மணி முதல் அனுமதிக்கப்படாது. ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஓரு புறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்! தெரியாம போய் சிக்கிக்காதீங்க!!

பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6வது அவென்யூவில் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. நாளை அதிகாலை 4 மணி வரையில் இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெசன்ட் நகா் 6-வது அவென்யூ இணைப்பு சாலைகளான 5வதுஅவென்யூ, 4வது பிரதான சாலை, 3வது பிரதான சாலை, 16வது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். மகாத்மாகாந்தி சாலை, 7வது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP