திருப்பாவை-26 ”மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்...”

பேரன்பிற்குரிய மணிவண்ணனே! மார்கழி நோம்பின் பொருட்டு எங்கள் குற்றம் களைய நீராடச் செல்கிறோம். அப்படி நீராடச் செல்லும் போது செய்ய வேண்டியவன என்று முன்னோர்கள், சான்றோர்கள் சிலவற்றை அறிவுறுத்தி வைத்திருக்கின்றனர்
 | 

திருப்பாவை-26 ”மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்...”

பேரன்பிற்குரிய மணிவண்ணனே! மார்கழி நோம்பின் பொருட்டு எங்கள் குற்றம் களைய நீராடச் செல்கிறோம். அப்படி நீராடச் செல்லும் போது செய்ய வேண்டியவன என்று முன்னோர்கள், சான்றோர்கள் சிலவற்றை அறிவுறுத்தி வைத்திருக்கின்றனர். அவற்றை எங்களுக்கு அளித்து உதவ வேண்டும். 

அண்ட சராசரங்கள் எல்லாம் அதிரும் வண்ணம் ஒலிக்கும், பால் போன்ற வெண்மை நிறத்தையுடைய  உன் பாஞ்சசன்னியத்தின் நேர்த்தியுடன், சங்கங்கள் வேண்டும். இங்கே இருபொருள்கள் கொள்ளலாம். ஒன்று பாஞ்சசன்யத்தைப் போன்ற சங்குகள் தா! அதனை ஊதி ஒலித்துக் கொண்டே எல்லாரையும் எழுப்பிக் கொண்டு செல்கிறோம்.

இரண்டாவது பொருள் : பாஞ்சசன்யம் போல் எல்லாருக்கும் அதிர்வை உண்டாக்க வல்ல பெருங்குரலை ஒலிக்கும் கழுத்துச் சங்கினை எமக்குக் கொடு. அப்படியான பெருங்குரல் கொண்டு நின் புகழ் பாடி பல்லாண்டு கோஷம் போடும் கோஷ்டிகளையும் கொடு.

பெரும்பறை வாமன அவதாரத்தில் சாம்பவன் மார்பில் கட்டியடித்த பெரும்பறை போன்ற பறை ஒன்று கொடு! அத்துடன் நின் வளம் கொழிக்க நின் மீது பிரியம் கொண்டு பல்லாண்டு பாடும் ஆழ்வார்கள் போன்றவர்களைக் கொடு. 

உலகின் கோல விளக்கான தாயாருடன், கொடியிலிருக்கும் கருடனையும், பிறந்ததும் புலம் பெயரும் போது உனக்கு விதானமாக நின்று மழை படாமல் காத்து நின்ற ஆதிசேஷ்னையும் அனுப்பு. நாங்கள் எல்லோரும் சேர்ந்து நோம்பிருத்து வேண்டுகிறோம். யாரை? மகாப் ப்ரளயம் உண்டான போது ஒரு ஆலிலையில் பூமியின் மொத்த உயிர்களின் நீட்சியாக ஆலின் இலையில் தவழ்ந்த கண்ணனை!

 “மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்”

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP