நிர்வாணமாக காருக்குள் ஜோடியாக இறந்து கிடந்த சோகம்! 2019ல் அதிர வைத்த க்ரைம்!

சேலத்தில், காதல் ஜோடி மர்மமான முறையில் காருக்குள் அரை நிர்வாணமாக இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

நிர்வாணமாக காருக்குள் ஜோடியாக இறந்து கிடந்த சோகம்! 2019ல் அதிர வைத்த க்ரைம்!

சேலத்தில், காதல் ஜோடி மர்மமான முறையில் காருக்குள் அரை நிர்வாணமாக இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சேலம்மாவட்டம் செவ்வாய்பேட்டை சாய்பாபா தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ் (22). வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வரும் இவர் வழக்கமாக இரவு 10 மணிக்குள் வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இரவு வெகு நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். 

அப்போது, முன்சீப் தெருவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கார் செட் முன்பு சுரேஷின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்ட உறவினர்கள் கார் செட் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவை திறக்காததால், உள் பக்கமாக பூட்டப்பட்ட கதவை ஒருவழியாக திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இளம்பெண்ணுடன் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

நிர்வாணமாக காருக்குள் ஜோடியாக இறந்து கிடந்த சோகம்! 2019ல் அதிர வைத்த க்ரைம்!

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோதி (19) என்பதும், சுரேசும் ஜோதியும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. 

இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஜோதியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரியவர்கள் அனைவரும் திட்டி எதிர்ப்புகளை தெரிவித்ததால், என்ன செய்வதென்று தெரியாத காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இறப்பதற்கு முன்பு இருவரும் காருக்குள் உல்லாசமாக இருந்துவிட்டு பின்னர், சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. காதல் ஜோடி நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை மறந்துவிட முடியாது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP