மறைந்த அதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி!

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
 | 

மறைந்த அதிமுக எம்.எல்.ஏவின் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி!

மறைந்த அதிமுக எம்.எல்.ஏ கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் இன்று காலை வீட்டில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனகராஜ், சிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து, கனகராஜின் மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், மறைந்த கனகராஜின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், கனகராஜின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவில் மிகவும் விசுவாசமாக பணியாற்றியவர் கனகராஜ். சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் மாவட்ட அளவிலும் பொறுப்புகள் வகித்துள்ளார். அவரது மறைவு அதிமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP