அமைச்சர் அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

கோவை பாரதியார் பல்கலைக்கழக விழா நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் உடல்நிலை சரியானது.
 | 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்றார். விழா நடந்துகொண்டிருக்கும் போது அமைச்சர் அன்பழகனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலை சரியானது. 

பின்னர் மருத்துவர்கள் சோதித்து பார்த்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP