அரவக்குறிச்சியில் பரப்புரையை தொடங்கினார் செந்தில் பாலாஜி!

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்
 | 

அரவக்குறிச்சியில் பரப்புரையை தொடங்கினார் செந்தில் பாலாஜி!

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று(ஏப்.18) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் வருகிற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். அரவக்குறிச்சி அடுத்த சேந்தமங்கலம் ஆர்.எல்லப்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து செந்தில் பாலாஜி தனது பிரச்சாரத்தை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். 

அரவக்குறிச்சியில் வரும் 22ம் தேதி வேட்பு மனுதாக்கல் ஆரம்பமாகிறது. 29ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மே19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP