மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு

2019- 20 ஆம் ஆண்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரூ. 88 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
 | 

மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதிக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு

மீன்பிடித் தடைக்கால நிவாரணத்திற்காக ரூ.88 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் 45 முதல் 60 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம்  அமல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவியாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2019- 20 ஆம் ஆண்டில் மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக ரூ. 88 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.  இந்த நிதி மூலம் 1.75 லட்சம் மீனவ கும்பங்கள் பயன்பெறும்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP