Logo

மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!!

பருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.
 | 

மீண்டும் தொடங்கிய மலை ரயில் சேவை - மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!!

பருவமழை காரணமாக ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் கடந்த 14 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைபட்டு வருவது அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பெய்த கன மழையால், மலை ரயில் செல்லும் ஹில்குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால், 3 நாட்களுக்கு மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, ரயில் பாதையை சீர் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடையவிருந்த நிலையில், மீண்டும் பெய்த கன மழை காரணமாக, கல்லாறு - குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில், சுமார் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் சேவை நவம்பர் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து, அடர்ந்த மலைக்காட்டின் நடுவே ரயில் பாதையின் மீது விழுந்து கிடக்கும் ராட்சத பாறைகளை, ரயில்வே ஊழியர்கள் சீரமைத்து வந்தனர். இந்நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் முடிவுற்றதைத் தொடர்ந்து இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் போக்குவரத்து வழக்கம் போல் இயங்க துவங்கியுள்ளது.

காலை 7.10 மணிக்கு 200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டுச் சென்றது மலை ரயில். கடந்த 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால், இதில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP